Cyclone Nivar | Cuddalore | கடலூரில் புயல் பாதிப்பு பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு.. முறையே நிவாரணம் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை..
கடலூரில் புயல் பாதிப்பு பகுதிகளில் முதலமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். முதல் கட்டமாக, ரெட்டிச்சாவடி அருகே உள்ள உடழப்பட்டு கிராமத்தில் சேதமடைந்துள்ள வாழை தோப்புகளை பார்வையிட்டு பாதிப்பு குறித்து விவசாயிகள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கடலூரில் முதலமைச்சர் நேரில் ஆய்வு
- News18 Tamil
- Last Updated: November 26, 2020, 4:45 PM IST
நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நிவர் புயலால் ஏற்பட்ட சூறைக்காற்று மற்றும் கனமழையால் கடலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. மரங்கள் வேரோடு சாலைகளில் சாய்ந்துள்ளன. மேலும் கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட விளை பயிர்கள், கடும் சேதமடைந்தன.
இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடலூரில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
முதல் கட்டமாக, ரெட்டிச்சாவடி அருகே உள்ள உடழப்பட்டு கிராமத்தில் சேதமடைந்துள்ள வாழை தோப்புகளை பார்வையிட்டு பாதிப்பு குறித்து விவசாயிகள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தேவனாம்பட்டினம் முகாமிலும், மீனவ கிராம மக்களிடமும் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.நாட்டுப்படகுகளுக்கு ஏற்பட்ட சேதத்தைக் கேட்டறிந்த முதல்வர் துறைமுகப் பகுதியைப் பார்வையிட்டார்.
முதல்வரே நேரடியாக வந்து சேதப்பகுதிகளை பார்வையிட்டதால், அவருக்கு பாதிப்பின் தீவிரம் தெரிந்திருக்கும். அதன் காரணமாக நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.