கொடநாடு கொள்ளை சம்பவத்தில் கைதானவர்களை ஜாமினில் எடுத்தது திமுக: முதல்வர் குற்றசாட்டு!

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு யாருமே ஜாமீன் கொடுக்க முன்வராத போது, திமுகவினர் தான் அந்த குற்றவாளிகளுக்கு ஜாமீன் அளித்தனர் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

news18
Updated: July 19, 2019, 2:28 PM IST
கொடநாடு கொள்ளை சம்பவத்தில் கைதானவர்களை ஜாமினில் எடுத்தது திமுக: முதல்வர் குற்றசாட்டு!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
news18
Updated: July 19, 2019, 2:28 PM IST
கொடநாடு கொள்ளை சம்பவத்தில் கைதானவர்களை திமுகவினர் தான் ஜாமினீல் எடுத்தனர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக, முதலமைச்சருக்கு பத்திரிக்கையாளர் ஒருவர் சவால் விடுகிறார் என்றும், அவர்களை ஏன் கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சட்டப்பேரவையில் ஐ.பெரியசாமி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலும், ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் விரிவாக அதுபற்றி விவாதிக்க முடியாது என்றும், பொய்யான குற்றச்சாட்டை பத்திரிக்கையாளர் கூறியதால் தான் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.


அப்போது குறுக்கிட்ட, சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள் என்றும், ஆனால் நீதிபதி தான் அவர்களை விடுதலை செய்தனர் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு யாருமே ஜாமீன் கொடுக்க முன்வராத போது, திமுகவினர் தான் அந்த குற்றவாளிகளுக்கு ஜாமீன் அளித்தனர் என்று கூறினார்.

Also see...

Loading...

First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...