5 மாவட்டங்களுக்கு புதிய நீரேற்ற திட்டம்: அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் பழனிச்சாமி..!

சரபங்கா நீரேற்ற திட்டத்தின் மூலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படுவதோடு, குடிநீர் பற்றாக்குறையும் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 மாவட்டங்களுக்கு புதிய நீரேற்ற திட்டம்: அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் பழனிச்சாமி..!
எடப்பாடி பழனிசாமி
  • Share this:
சேலம், அரியலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு பயன்தரத்தக்க மேட்டூர் சரபங்கா நீரேற்ற திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

மழைக்காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை, சேலம் மாவட்டத்தின் வறட்சியான பகுதிகளான நங்கவள்ளி, வனவாசி, மேச்சேரி, தாரமங்கலம், எடப்பாடி, சங்ககிரி மற்றும் கொங்கணாபுரம் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு திருப்பிவிட வேண்டும் என கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டது.

ஆனால் இந்த பகுதிகளில் ஏரிகளின் மட்ட அளவுகள், மேட்டூர் அணையின் முழுநீர் மட்ட அளவை விட உயரமான பகுதிகளில் அமைந்திருப்பதால் கால்வாய் அமைத்து நீர் வழங்க இயலாது. நீரேற்றத் திட்டத்தின் மூலம் மட்டுமே நீர் வழங்க முடியும்.


அதேபோல், அணையின் உபரிநீரை சரபங்கா, வசிஷ்ட மற்றும் திருமணிமுத்தாறு போன்ற ஆறுகளை இணைப்பதன் மூலம் சேலம், நாமக்கல், அரியலூர், விழுப்புரம், கடலூர் என 5 மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

ஏரிகள், குளங்கள், கால்வாய்களில் காவிரி உபரி நீரை சேமிப்பதுடன் குடிநீர் பிரச்னையும் தீர்க்கப்படும். இந்நிலையில், இத்திட்டத்தின் முதற்கட்டமாக சேலம் மாவட்டம் இருப்பாளி கிராமத்தில் உள்ள மேட்டுப்பட்டி ஏரி அருகில் மேட்டூர் - சரபங்கா நீரேற்றத்திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிச்சாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

இத்திட்டம் மூலம், மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரி நீர், சரபங்கா வடிநில பகுதியில் உள்ள வறட்சியான 100 ஏரிகள் மற்றும் குளங்களுக்கு மின்மோட்டார் மூலம் நீரேற்றம் செய்யப்படும். 565 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தின் மூலம், சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர், மேட்டூர் ஆகிய 4 வட்டங்களில் 4238 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.சரபங்கா நீரேற்ற திட்டத்தின் மூலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படுவதோடு, குடிநீர் பற்றாக்குறையும் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
First published: March 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading