CM EDAPADI PALANISAMI INSISTS GOVERNOR ON MEDICAL RESERVATION TO GOVERNMENT SCHOOL STUDENTS MG
மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு.. ஆளுநரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்..
Edapadi palanisami - Governer
மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் அறிக்கை அளித்ததாக கூறப்படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்கட்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். அவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி ஆகியோரும் ஆளுநரை சந்தித்தனர்.
அப்போது, கொரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் அறிக்கை அளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சட்டம் மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.