Home /News /tamil-nadu /

Veda Nilayam | ஜெயலலிதா நினைவு இல்லம் இன்று திறப்பு

Veda Nilayam | ஜெயலலிதா நினைவு இல்லம் இன்று திறப்பு

Youtube Video

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் "வேதா நிலையம்" இல்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

    ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா நிலையம்' நினைவு இல்லமாக மாறுகிறது. அதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற அதிமுகவின் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற முதலமைச்சர் பழனிசாமி, வேதா இல்லத்தை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழுவை அமைத்தார். இந்த குழு அளித்த பரிந்துரையின் பேரில் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணியை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டனர்.

    அத்துடன், வர்ணம் தீட்டப்பட்டு, ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான பணிகளும் நடைபெற்றன. இந்நிலையில், நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ள வேதா நிலையம் இல்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். மேலும், இதில் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், அதிமுக நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.

    மேலும் படிக்க...பொள்ளாச்சி வழக்கில் இதுவரை 8 பேர் கைது - 5வது பெண் வாக்குமூலம்..

    வீடியோ



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CM Edappadi Palaniswami, Jayalalithaa, Jayalalithaa memorial, Vedha House

    அடுத்த செய்தி