பொள்ளாச்சி விவகாரத்தில் யார் தவறிழைத்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பொள்ளாச்சி விவகாரத்தில் யார் தவறிழைத்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பொள்ளாச்சி விவகாரத்தில் யார் தவறிழைத்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்ககூடிய அரசு அதிமுக அரசு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்குக் காரணமான அதிமுகவினர் உட்பட, அனைவருக்கும் விரைந்து தண்டனை வழங்கவேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

  இதுதொடர்பாக அவர் விடுத்திருந்த அறிக்கையில், பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தை சீரழித்துள்ளது அதிமுக அரசு என குற்றம்சாட்டியுள்ளார். பெண்கள் கதறிய குரல் இன்னமும் நம் காதுகளில் ஒலித்து, இதயத்தைக் கிழித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட ஸ்டாலின், இந்தப் பாலியல் கொடுமைகளின் பின்னணியில் அதிமுகவினர் இருக்கிறார்கள் என்பதைத் தொடக்கத்திலிருந்தே திமுக உள்ளிட்ட கட்சிகள் சுட்டிக்காட்டி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

  இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, யார் தவறிழைத்தாலும் அதிமுக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் எனத்தெரிவித்தார்.

  இதனிடையே கைதான அதிமுக பிரமுகருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். கட்சி பிரமுகர் என்ற முறையில் கூட்டங்களுக்கு எங்கேயாவது அருளானந்தம் வந்திருக்கலாம் என்றும், அவரை கடந்த திங்கள்கிழமைதான், நேரில் பார்த்ததாகவும் பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம் அளித்துள்ளார்.

  மேலும் படிக்க... அரசு மருத்துவமனைகள் சாக்கடை போல் உள்ளன: கமல் விமர்சனம்

  இதையடுத்து, பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளராக இருந்த அருளானந்தத்தை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஓபிஎஸ் - இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் கொள்கை, குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி தொண்டர்கள் யாரும் அவருடன் எந்தவித தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் அதிமுக உத்தரவிட்டுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: