உங்கள் மாவட்டத்தைத் தேர்வுசெய்க

    ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை உடைக்க முடியாது- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

    ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை உடைக்க முடியாது- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

    அதிமுகவை உடைக்க ஸ்டாலின் சதி செய்கிறார் என்றும் ‘முதலில் உன் கட்சியைக் காப்பாற்றிக் கொள்’ என்றும் முதலமைச்சர் ஆவேசமாக சாடினார். 

    அதிமுகவை உடைக்க ஸ்டாலின் சதி செய்கிறார் என்றும் ‘முதலில் உன் கட்சியைக் காப்பாற்றிக் கொள்’ என்றும் முதலமைச்சர் ஆவேசமாக சாடினார். 

    • Share this:
    தமிழக முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி திருச்சி மாவட்டத்தில் இன்றும் நாளையும் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, சட்டமன்ற உறுப்பினர் செல்வராசு உள்ளிட்ட பலர் வரவேற்பளித்தனர்.

    பின்னர் தொட்டியம் வான பட்டறை மைதானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது,  “எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் புதிதாக கட்சித் தொடங்குபவராக இருந்தாலும் எம்.ஜி.ஆர் பெயரை உச்சரிக்காமல் இருப்பதில்லை. அந்தளவிற்கு உத்தம தலைவர்.எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இருபெரும் தலைவர்களும் தெய்வம் போல் மக்களுக்கு நல்லது செய்துள்ளனர். எனவே அவர்களின் இந்த ஆட்சி தொடர வேண்டும். கல்விப் புரட்சி ஏற்பட்டுள்ளது. உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பல துறைகள் இருந்தாலும் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது”  என்றார்.

    அதன் பின்னர், “பல திட்டங்களை மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆனால்,  மு.க.ஸ்டாலின் பொய் குற்றம் சாட்டுகிறார். அதிமுக உடையும் என்று பேசியுள்ளார். இருபெரும் தலைவர்களும் உயிரைத்தியாகம் செய்து வளர்த்த அதிமுகவை உடைக்க மு.க.ஸ்டாலின் சதித்திட்டம் செய்கிறார். கட்சியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். யாராலும் அதிமுக வை உடைக்க முடியாது. ஒரு தொண்டனைக் கூட தொட்டுப்பார்க்க முடியாது. கட்சியை உடைக்கவும் ஆட்சியைக் கவிழ்க்கவும் எவ்வளவோ முயற்சி. ஆனால், மக்களின் ஒத்துழைப்பால் வலுவான இயக்கமாக அதிமுக உள்ளது.” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    மேலும், “குழப்பம் ஏற்படுத்தி கட்சியை உடைக்க சதி செய்யலாம். ஆட்சியைப் பிடிக்கலாம் என்கிற கனவு நிறைவேறாது. முதலில் உன் கட்சியை காப்பாற்றிக் கொள். அதிமுக தெய்வசக்தி  உள்ள உயிரோட்டமுள்ள இயக்கம். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் உடைக்க முடியாது. எனவே, நல்ல எண்ணத்தை ஸ்டாலின் வளர்த்துக் கொள்ள வேண்டும். திமுகவினருக்கு நல்ல எண்ணம் வராது என்றும்” குற்றம்சாட்டி பேசினார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், “எதிர்க்கட்சித் தலைவருக்கு பொய்ய கூட ஒழுங்கா சொல்லத் தெரியல. பொய்ய சொன்னாலும் பொருத்தமா சொல்லனும் போக்கத்தவங்களா? என்பது அவருக்குத்தான் பொருந்தும். என்மீதும், அமைச்சர்கள் மீதும் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்துள்ளார். டெண்டர் நடக்காத, ஒன்றரை ஆண்டுக்கு முன்பு டெண்டர் ரத்தானது கூட தெரியாமல் ஊழல் பட்டியல் கொடுக்கிறார் ஸ்டாலின். நாட்டில் என்ன நடக்குதுன்னே தெரியாத எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்” என்று குற்றம்ச்சாட்டினார்.

    மேலும் படிக்க...ரஜினிகாந்த் என்றுமே மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார்தான், அரசியல் தலைவர் இல்லை: விக்கிரமராஜா

    தொடர்ந்து திருச்சி மாவட்டம், முசிறி, சட்டமன்ற தொகுதி தொட்டியம் பேரூராட்சியில், பண்ணை வீடு பகுதியில், வாழை விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. வாழை, வெற்றிலை, கரும்பு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். முன்னதாக தொட்டியம், வெற்றிலை பால விநாயாகர் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதையும், பெண்கள் மஞ்சள்  கொத்து அளித்து ஆரத்தி எடுத்து முதல்வருக்கு வரவேற்பளித்தனர். தொடர்ந்து முசிறி, கண்ணனூர் , துறையூர் மண்ணச்சநல்லூர் சமயபுரம் டோல்கேட் ஆகிய இடங்களில் பேசுகிறார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: