கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

. ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான தொடரில் பங்கேற்கும் அணியில் இடம்பிடித்துள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் தோளில் காயம் ஏற்பட்டதால் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.சேலம் சின்னம்பட்டியை சேர்ந்தவர் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். துல்லியமான யார்க்கர், தரமான பந்துவீச்சு மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடராஜன். டி-வில்லியர்ஸ், தோனி உள்ளிட்ட பேட்ஸ்மேன்களை திணற வைத்து விக்கெட் வீழ்த்திய நடராஜன் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த நடராஜன், இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் சேலம் மண்ணின் மைந்தர் திரு.நடராஜன் அவர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது பெருமைக்குரிய விஷயம். அவரது சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் கூறியுள்ளார்.

  நடராஜன்


  ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய வீரர்கள் 3 ஒரு நாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தின் முதல் ஒரு நாள் போட்டி நவம்பர் 27-ம் தேதி சிட்னி மைதானத்தில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Vaijayanthi S
  First published: