Home /News /tamil-nadu /

அரசு திட்டங்களின் நிலை என்ன? அனைத்து துறை செயலாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

அரசு திட்டங்களின் நிலை என்ன? அனைத்து துறை செயலாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

MK Stalin: வரும் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai
    தமிழக அரசு அறிவித்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

    தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று 16 மாதங்களைக் கடந்துள்ளது. இதில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் துறைவாரியாக மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்களின் செயல்பாடுகளின் நிலை என்ன? எப்போது முழுமை பெறும் என்பது குறித்து  முதலமைச்சர் கேட்டறிய உள்ளார்.

    ALSO READ | குடிசைகளை தார்பாய் கொண்டு மறைக்கும் ஆட்சி அல்ல திராவிட மாடல் ஆட்சி - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

    மேலும், வரும் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார். வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இதற்கு முன்னதாக துறைவாரியாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விரிவான அறிவுரைகளை முதலமைச்சர் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Chennai, CM MK Stalin, MK Stalin, Tamil Nadu government, Tamilnadu

    அடுத்த செய்தி