Home /News /tamil-nadu /

''முதலமைச்சரின் தகவல் பலகை” இன்று திறப்பு - சிறப்பம்சம் என்ன?

''முதலமைச்சரின் தகவல் பலகை” இன்று திறப்பு - சிறப்பம்சம் என்ன?

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மத்திய பிரதேசம், ஆந்திரா, நாகாலாந்து, இமாச்சலபிரதேசம், உத்தாரகண்ட், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் முதலமைச்சருக்கான மின்னணு தகவல் பலகை பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    முதல்வரின் அலுவலக அறையில் இருந்தபடியே அரசின் அனைத்து திட்டங்கள், அறிவிப்புகளின் மீதான நடவடிக்கையை கண்காணிக்கும் வகையில், மின்னணு தகவல் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்தது. தற்போது ஆட்சிப் பொறுப்பேற்று 7 மாதங்கள் கடந்துள்ள நிலையில், 200 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் துறை செயலாளர்களுடனான கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், அனைத்து துறைகளின் திட்டங்கள் குறித்த தகவல்களை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் ஆன்லைன் தகவல் பலகையை ஏற்படுத்தி, அதன்மூலம் தினசரி ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார்.

    அதனடிப்படையில், முதலமைச்சருக்கான டேஷ்போர்டு என்ற மின்னணு தகவல் பலகை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பலகையை புதன்கிழமை முதலமைச்சர் ஸ்டாலின் இயக்கி வைத்து, பார்வையிடுகிறார். இதில், வழக்கமான தகவல்கள் போல் அல்லாமல் ஒவ்வொரு துறைதோறும், திட்டங்கள் தோறும் நிகழ்நிலை புள்ளிவிவரங்கள் கோரப்பட்டு, அவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

    Also Read : தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெறுவார்: அமைச்சர் சேகர் பாபு

    இதன்மூலம், வாக்குறுதிகள், வெளியிட்ட அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றம் குறித்த தகவல்களை முதலமைச்சர் ஒரு சொடுக்கின் மூலம் பார்க்க முடியும். எந்த கிராமத்தில் என்ன பணிகள் நடைபெறுகிறது? எங்கு தொய்வு இருக்கிறது? அடுத்த ஒரு ஆண்டுக்கான திட்டம் என அனைத்தையும் முதலமைச்சர் தெரிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகை தயார் செய்யப்பட்டுள்ளது.

    Also Read : சின்ன பசங்கன்னு தகராறு பண்ணிருக்காங்க... ஒரு வேள அங்க நான் இருந்திருந்தால்..? சீமான் ஆவேசம்

    தலைமை செயலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகிவிட்டதைத் தொடர்ந்து புதன்கிழமை முதல் மின்னணு தகவல் பலகையை முதலமைச்சர் ஸ்டாலின் பயன்படுத்த உள்ளார். ஏற்கனவே, மத்திய பிரதேசம், ஆந்திரா, நாகாலாந்து, இமாச்சலபிரதேசம், உத்தாரகண்ட், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் முதலமைச்சருக்கான மின்னணு தகவல் பலகை பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vijay R
    First published:

    Tags: DMK, MK Stalin

    அடுத்த செய்தி