தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்துவரும் 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம்
  • Share this:
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சுழல் நிலவுகிறது. இந்நிலையில், அடுத்துவரும் 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை


மத்திய வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்றுக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் நாளை வரை இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலைமையம் அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல், மத்திய கிழக்கு அரபிக்கடல், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில், பலத்த காற்று 50-60 கி.மீ. வேகத்தில் வீசுவதால் வருகிற ஜூலை 7ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading