காலநிலை மாற்றம் மானுடத்தின் மிகப்பெரிய பிரச்சனை: மு.க.ஸ்டாலின் உரை

மு.க.ஸ்டாலின்

வரலாற்றில் முதல் முறையாக வரும் 14ம் தேதி வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

  • Share this:
காலநிலை மாற்றம் மற்றும்  கொரோனா நோய் தொற்று பின்னணியில் உணவு மற்றும் ஊட்டச்சத்து உறுதி செய்தல் தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கை சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ் சாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகையில், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் 32ம் ஆண்டு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

Also read: மறைந்த மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி!

நாளை எம்.எஸ். சுவாமிநாதன் 96வது பிறந்தநாள், அவரின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க நிச்சயம் நான் வருவேன் என்று கூறினார். மேலும் அவரின் அறிவையும் ஆற்றலையும் போற்றும் அரசாக திமுக எப்போதும் இருந்துள்ளது.

எம்.எஸ்.சாமிநாதன் அவர்களுக்கு உதவி செய்தால் அது நாட்டிற்கு, நாட்டு மக்களுக்கு பயன்படும் என்கிற தொலைநோக்கோடு சிந்தித்து இந்த நிறுவனம் வளர முன்னாள் முதல்வர் கருணாநிதி இந்த இடத்தை அளித்துள்ளார்.

தமிழ் வேளாண் விஞ்ஞானி என்பதற்கு எடுத்துக்காட்டாக எம்.எஸ்.சாமிநாதன், குறிஞ்சி முல்லை மருதம் என இந்த இடங்களை பிரித்துள்ளார்.

வரும் 13ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும், வரலாற்று முதல் முறையாக 14ம் தேதி வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறோம் என்றார். இயற்கை வேளாண்மை தனி கவனம், உழவர் சந்தையை புதுபித்தல், கிராம சந்தைகள் அமைக்க நடவடிக்கைகள், நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்த புதிய திட்டம், சென்னை நகரில் வெள்ள நீர் சூழாத வகையில், பெருநகர வெள்ள நீர் குழுமம் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.

வரப்பு உயர நீர் உயரும் என்ற தமிழ் நெறியை முழுமையாக கடை பிடித்து இந்த ஆட்சி நடந்து வருகிறது என்ற அவர், பசி பிணியை போக்குவதை நோக்கமாக கொண்டு அரசு செயலப்பட்டு வருகிறது என்றார்.

காலநிலை மாற்றம் மாறிவருது தற்போது பெரிய பிரச்சனையாக உள்ளது. அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகளவில் ஏற்பட்டு வருவதாக கூறிய முதலமைச்சர், இது மானுடத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ள நிலையில், இதற்கான ஆலோசனையை சூழலியல் ஆராய்ச்சியாளர்கள் தமிழக அரசு வழங்க வேண்டும், அதை திறந்த மனதுடன் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல் வேளாண்மையை லாபகரமான தொழிலாக, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மாற்றும் மாநாடாக அமையட்டும் என்றும், நாட்டுக்கும், வேளாண்மைக்கு, சுற்றுச்சூழலுக்கு தொண்டாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
Published by:Esakki Raja
First published: