டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி தொடக்கம்: சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்..!

ஐஏஎஸ் அதிகாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டத்துக்கு சென்று, பணிகள் முடியும் வரை கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி தொடக்கம்: சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்..!
மாதிரிப்படம்
  • Share this:
காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்கும் வகையில், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக தமிழக அரசு நியமித்துள்ளது.

7 மாவட்டங்களில் காவிரி ஆற்றில் தூர்வாரும் பணிகளை 38 தொகுப்புகளாக மேற்கொள்ள 67 கோடியே 24 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.

இந்தப் பணிகளை ஆய்வுசெய்து, 10 நாட்களுக்குள் முடிக்க மாவட்டத்துக்கு ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு ககன்தீப் சிங் பேடி, திருவாரூர் மாவட்டத்துக்கு ராஜேஷ் லக்கானி, நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு சந்திரமோகன்,  புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அபூர்வா, கரூர் மாவட்டத்துக்கு கோபால், திருச்சிக்கு கார்த்திக், அரியலூருக்கு விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டத்துக்கு சென்று, பணிகள் முடியும் வரை கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading