துப்புரவு பணியாளர்களை கீழே அமர வைத்து சேர்மன், ஆணையர் மட்டும் நாற்காலியில் அமர்ந்து கலந்தாய்வு கூட்டம் நடத்தியதால் சர்ச்சை
துப்புரவு பணியாளர்களை கீழே அமர வைத்து சேர்மன், ஆணையர் மட்டும் நாற்காலியில் அமர்ந்து கலந்தாய்வு கூட்டம் நடத்தியதால் சர்ச்சை
துப்புரவு பணியாளர்களை கீழே அமர வைத்த சேர்மன்
Tiruppur District | துப்புரவு பணியாளர்களை தரையில் அமர வைத்து திமுகவை சேர்ந்த பாப்பு கண்ணன் என்பவரும், தாராபுரம் நகராட்சி ஆணையர் ராமர் என இருவர் மட்டும் நாற்காலியில் அமர்ந்து கூட்டத்தில் பேசியுள்ளனர்.
திருப்பூரில் துப்புரவு பணியாளர்களை கீழே அமர வைத்து சேர்மன், ஆணையர் நாற்காலியில் அமர்ந்த படியும் அருகில் சிலர் நின்று கொண்டிருந்தவாரும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே கடந்த வாரம் சாக்கடை கழிவுகளை உரிய உபகரணங்கள் இல்லாமல் வெறும் கைகளால் துப்புரவு பணியாளர் அகற்றியது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளம் மற்றும் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தது.
இதையடுத்து முறையாக உபகரணங்களை வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தாராபுரம் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் தரையில் அமர வைக்கப்பட்டுள்ளனர். சேர்மன் பாப்பு கண்ணன், நகராட்சி ஆணையர் ராமர் இருவரும் நாற்காலியில் அமர்ந்தபடியும் அருகில் சிலர் நின்று கொண்டும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. நகராட்சி அலுவலகத்தில் ஏராளமான இருக்கைகள் இருந்ததாக கூறப்படுகின்றது.
இருந்த போதும் முழுமையான பணிகள் நிறைவு பெறாத அரங்கில் துப்புரவு பணியாளர்களை தரையில் அமர வைத்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
திமுகவை சேர்ந்த பாப்பு கண்ணன் என்பவரும், தாராபுரம் நகராட்சி ஆணையர் ராமர் என இருவர் மட்டும் நாற்காலியில் அமர்ந்து கூட்டத்தில் பேசியதும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள இடத்தில் ஒரு சிலருக்கு மட்டும் உபகரணங்கள் கொடுத்து பெயரளவில் கூட்டத்தை நடத்தியுள்ளனர்.
செய்தியாளர் : பாலாஜி பாஸ்கர்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.