• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Headlines Today : கல்லூரிகளில் இனி வாரம் 6 நாட்கள் நேரடியாக வகுப்பு

Headlines Today : கல்லூரிகளில் இனி வாரம் 6 நாட்கள் நேரடியாக வகுப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

Headlines Today : உள்ளூர் முதல் உலகநடப்புகள் வரை அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

  • Share this:
    கல்லூரிகளில் இனி வாரம் 6 நாட்கள் நேரடியாக வகுப்பு : கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இனி வாரம் 6 நாட்கள் நேரடியாக வகுப்புகளை நடத்த வேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக 50 சதவீத மாணவர்களுடன் ஒரு நாள் விட்டு ஒருநாள் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், அதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகளை நடத்தவும், அதற்கு முன்னதாக மாதிரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை உத்தரவை அனைத்து கல்லூரிகளும் முறையாக கடைப்பிடிக்கிறதா என்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நாளை தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கைக்கும், தென் மாவட்டங்களுக்கும் இடையே கரையை கடக்கும். வடகிழக்கு பருவமழை காலத்தில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, நான்காவது புயல் சின்னமாகும். இந்த தாழ்வு பகுதியால், துாத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மத்திய குழு ஆய்வு : சென்னையில் வெள்ள சேதத்தை பார்வைட்ட மத்திய குழுவினர் ராஜிவ் சர்மா உள்ளடங்கிய 4 பேர் கொண்ட குழு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு குறித்து நேரில் இன்று ஆய்வு செய்கிறது. இதையடுத்து, பிற்பகலில் நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களில் சேத விவரம் குறித்த தகவல்களை சேகரிக்க உள்ளது. அத்துடன், ஆர்.பி.கவுல் உள்ளடஙகிய 3 பேர் கொண்ட குழு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்யவுள்ளது.

    ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் : பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்றும் சொந்த காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்த விரும்பாத ஆசிரியர்கள் மற்றவர்களின் நலன்கருதி வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    இந்தியாவுக்கு வழிவிட்ட பாகிஸ்தான் : ஆப்கானிஸ்தானில் உணவு பொருட்களுக்கான பஞ்சம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இந்தியா 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் மருத்துவ உபகரணங்களை நல்லிணக்க அடிப்படையில் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும், இந்த பொருட்களை வாகா எல்லையை கடந்து பாகிஸ்தான் வழி, சாலை மார்க்கமாக அனுப்ப அனுமதிக்கும்படி அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மனிதாபிமான நெருக்கடியைத் தவிர்க்க ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் கூட்டுப் பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: