• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கல்விக்கட்டணம் செலுத்தாததால் ஆன்லைன் வகுப்புக்கு அனுமதி மறுப்பு - பள்ளி மாணவி தற்கொலை முயற்சி

கல்விக்கட்டணம் செலுத்தாததால் ஆன்லைன் வகுப்புக்கு அனுமதி மறுப்பு - பள்ளி மாணவி தற்கொலை முயற்சி

கோப்புப்படம்.

கோப்புப்படம்.

கட்டணம் செலுத்தாதால் தனியார் பள்ளி ஆன்லைன் வகுப்பில் அனுமதிக்காததால் 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

  • Share this:
நாகை மாவட்டம் நாகூர் அடுத்துள்ள முட்டம் கிராமத்தை சேர்ந்த விஜயராஜ் என்பவரது மகள், வடகுடியில் உள்ள அமிர்தா வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கொரோனோ அச்சம் காரணமாக பள்ளி விடுமுறையில் இருந்த நிலையில் ஆன்லைனில் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்த தற்போது தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அடுத்த வாரம் ஆன்லைன் தேர்வு தொடங்கப்பட உள்ள நிலையில் பள்ளி நிர்வாகம் இன்றிலிருந்து, ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை தொடங்கியுள்ளது.

Also read... அரசு 3 மாதங்களாக ஊதியம் தரவில்லை: வாழ்வாதாரத்தை இழந்ததாக கவுரவ விரிவுரையாளர்கள் வேதனை..

ஆனால், கல்வி கட்டணம் மீதமுள்ள மாணவர்கள், முழுமையாக கல்வி கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே, ஆன்லைன் தேர்வில் பங்கேற்க முடியும் என்று பள்ளி நிர்வாகம் வாட்ஸ்அப் மூலம் அறிவித்துள்ளது.

இதனை பார்த்த மாணவி ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியாத மன விரக்தியில் மனமுடைந்து வீட்டின் அறையில் புடவையை கொண்டு தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

சிறுமியை காப்பாற்றிய உறவினர்கள் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாகூர் அடுத்த நரிமணம் பகுதியில் செயல்படும் இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்தில் கடந்த மூன்று மாத காலமாக ஊதியம் கொடுக்காத காரணத்தால் பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை என்று மாணவியின் தந்தை விஜயராஜ் வேதனையோடு தெரிவித்துள்ளார்.




மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: