• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 12ம் வகுப்பு தேர்வு: நுழைவுத் தேர்வு முறையைத் திணிக்கவே இந்த நாடகம்; சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம்: திருமாவளவன்

12ம் வகுப்பு தேர்வு: நுழைவுத் தேர்வு முறையைத் திணிக்கவே இந்த நாடகம்; சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம்: திருமாவளவன்

திருமாவளவன்

திருமாவளவன்

கொரோனா நெருக்கடியில் மாணவர்களுக்குத் தேர்வு எழுதுவது கடினமானதுதான். ஆனால், 12ஆம்வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தியே ஆக வேண்டும். அது இன்றிமையாததாகும்.

  • Share this:
    சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. நுழைவுத் தேர்வு முறையைத் திணிக்கவே இந்த நாடகம்; சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்துள்ளது. இதனை உச்ச நீதிமன்றமும் வரவேற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்த பெரும் விவாதம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் படிக்கும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் தமிழக அரசு கருத்து கேட்டது. அதைத்தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள், சட்டமன்ற பிரதிநிதிகளுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனையில் நடந்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு தேர்வு குறித்து மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்களுடனும் ஆலோசிக்கப்படும் என்றும், அனைத்து தரப்பினர் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் முதலமைச்சர் உரிய முடிவை அறிவிப்பார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

    Also read: உறவுகளை இழந்த மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும்..நுழைத்தேர்வுகளை நீக்குக - ராமதாஸ் வேண்டுகோள்

    இந்நிலையில், நுழைவுத் தேர்வு முறையைத் திணிக்கவே இந்த நாடகம்; சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, கொரோனா நெருக்கடியில் மாணவர்களுக்குத் தேர்வு எழுதுவது கடினமானதுதான். ஆனால், 12ஆம்வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தியே ஆக வேண்டும். அது இன்றிமையாததாகும். மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகள் அனைத்திற்கும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் தேவையாகும்.

    சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. தமிழகத்திலும் அதனைப் பின்பற்ற வேண்டாம். அனத்துப் பட்ட வகுப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு முறையைத் திணிப்பதற்காகவே இந்த நாடகம். இந்திய அரசின் சூழ்ச்சிக்குப் பலியாக வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: