கடலூரில் உட்கட்சி மோதல்... பிரச்சாரத்தை பாதியில் நிறுத்தி விட்டு வீடு திரும்பிய திமுக வேட்பாளர்

கடலூரில் உட்கட்சி மோதல்... பிரச்சாரத்தை பாதியில் நிறுத்தி விட்டு வீடு திரும்பிய திமுக வேட்பாளர்

பிரச்சாரத்தின்போது மோதல்

கடலூரில் திமுகவினரிடையே உட்கட்சி மோதல் ஏற்பட்டதால் தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்தி விட்டு திமுக வேட்பாளர் வீடு திரும்பினானர். அங்கு ஏற்பட்டபரபரப்பால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

 • Share this:
  கடலூரில் திமுகவினரிடையே உட்கட்சி மோதல் ஏற்பட்டதால் தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்தி விட்டு திமுக வேட்பாளர் வீடு திரும்பினானர். அங்கு ஏற்பட்ட பரபரப்பால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

  கடலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக கோ. ஐயப்பன் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே திமுகவில் இருந்து அதிமுகவிற்ககு சென்று பின்னர் மீண்டும் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இனைந்தவர். இவருக்கு வாய்ப்பு  கொடுத்ததால் திமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது.

  வேட்பாளர் ஐயப்பன் பிரசாரத்தை தொடங்கிய நாள் முதல் பல இடங்களில் திமுகவினர் இடையே சலசலப்பும், உட்கட்சி பூசலால் சிறு சிறு மோதல் போக்குகளும் நிலவி வந்தன.

  இந்நிலையில் கடலூர் பாதிரிகுப்பம் பகுதியில் திமுக வேட்பாளர் ஐயப்பன் தனது கட்சியினருடன் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்துவந்தார். அந்த பிரச்சார வாகனத்தில் திமுக நிர்வாகி ஒருவரை கீழே இறங்கச் சொன்னதால் கட்சி நிர்வாகிகளுடன் மோதல் ஏற்பட்டது.

  இதனால் தேவனாம்பட்டினம் திமுக நிர்வாகிகள் மற்றும் பாதிரிகுப்பம் பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

  இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோதலில் ஈடுபட்ட இருதரப்பு நிர்வாகிகளையும் கலைந்துபோகச் செய்தனர். திமுக நிர்வாகிகள் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் வாக்கு சரிவு ஏற்படும் எனபதால் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு,  வேட்பபாளர் அங்கிருந்த  பிரச்சார வாகனத்திலே சென்றுவிட்டார்.

  Must Read :  ஜல்லிக்கட்டின் நிஜ நாயகர்கள் இளைஞர்கள்தான்... ஓபிஎஸ், மோடி இல்லை - மு.க.ஸ்டாலின்

   

  திமுகவில் இவர் வேட்பபாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பல இடங்களில் திமுகவினர் மோதிகொள்ளும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர் : பிரேம் ஆனந்த்
  Published by:Suresh V
  First published: