Home /News /tamil-nadu /

நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் மோதல்: அலறியடித்து ஓடிய பெண்கள் - வீடியோ

நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் மோதல்: அலறியடித்து ஓடிய பெண்கள் - வீடியோ

மேடையில் சிதறிக் கிடக்கும் நாற்காலிகள்

மேடையில் சிதறிக் கிடக்கும் நாற்காலிகள்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    ராமநாதபுரத்தில் தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

    உலக பெண்கள் முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில், ராமநாதபுரத்தில் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது, அந்த அமைப்பில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டதாக கூறப்படும் சிலர், அமைப்பின் தென்மண்டல தலைவி வனிதா மகாலட்சுமியை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

    பின்னர் விழா மேடையில் இருந்த மேஜை, நாற்காலிகளை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டதால், பெண்கள் அலறியடித்தபடி ஓட்டம்பிடித்தனர். விசாரணையில், வனிதா மகாலட்சுமி ஏற்கெனவே "டிஸ்க்" என்ற நிறுவனத்தில் பணியாற்றி பயனாளிகள் பலரிடம் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாகவும், அந்த பணத்தை கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

    Published by:DS Gopinath
    First published:

    Tags: Clash, Ramanathapuram, Welfare scheme, Welfare scheme dispursal

    அடுத்த செய்தி