சிதம்பரம் தொகுதியில் இரு தரப்பினரிடையே மோதல்! 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சூறை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில், திருமாவளவனின் சின்னமான பானையை ஒரு தரப்பினர் உடைத்துள்ளனர்.

சிதம்பரம் தொகுதியில் இரு தரப்பினரிடையே மோதல்! 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சூறை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில், திருமாவளவனின் சின்னமான பானையை ஒரு தரப்பினர் உடைத்துள்ளனர்.
  • News18
  • Last Updated: April 18, 2019, 5:17 PM IST
  • Share this:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் இரு தரப்பினருக்கிடைய ஏற்பட்ட தகராறில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன.  அதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வந்தாலும், ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில், திருமாவளவனின் சின்னமான பானையை ஒரு தரப்பினர் உடைத்துள்ளனர். அதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரு தரப்பினரிடையே பெரும் தகராறு ஏற்பட்டது. அப்பொழுது மற்றொரு பிரிவினர் தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார்


இதனால் ஆத்திரமடைந்த ஒரு பிரிவினர் காலணி தெருவில் புகுந்து 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் ஓடுகளை அடித்து சேதப்படுத்தினர். மேலும், ஒரு சில வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து, காவல்துறையினர் வந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டினர்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Also see:

First published: April 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading