முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுகவில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையேயான முரண்பாடு பணம், பதவிக்கானது - சிபிஎம் மாநில செயலாளார் பாலகிருஷ்ணன் விமர்சனம்

அதிமுகவில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையேயான முரண்பாடு பணம், பதவிக்கானது - சிபிஎம் மாநில செயலாளார் பாலகிருஷ்ணன் விமர்சனம்

கே.பாலகிருஷ்ணன்

கே.பாலகிருஷ்ணன்

மாநில உரிமைகளை நசுக்க பார்க்கும் மத்திய பாஜக அரசை எதிர்ப்பதில் அவர்களுக்குள் எந்தவித முரண்பாடும் ஏற்படவில்லை எனவும் பாஜகவை ஆதரிப்பதில் இருவருக்கும் இடையே மாற்றுக்கருத்து ஏதும் கிடையாது

  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

அதிமுகவில் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்க்கும் இடையேயான முரண்பாடு கொள்கை ரீதியானது அல்ல எனவும் அது பதவி மற்றும் அதிகாரத்திற்கானது எனவும் சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சென்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் தற்போது ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்-க்கு இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு கொள்கை ரீதியானது அல்ல. பணம், பதவி மற்றும் அதிகாரத்திற்கானது‌ எனவும் அது எப்போதும் தீரப்போவதில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

மாநில உரிமைகளை நசுக்க பார்க்கும் மத்திய பாஜக அரசை எதிர்ப்பதில் அவர்களுக்குள் எந்தவித முரண்பாடும் ஏற்படவில்லை எனவும் பாஜகவை ஆதரிப்பதில் இருவருக்கும் இடையே மாற்றுக்கருத்து ஏதும் கிடையாது எனவும் கூறினார். ஒருவேளை மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு இருவரையும் கட்டாயப்படுத்தி சமரசம் அடைய சொன்னால் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் என்ன சொல்வார்கள் என தெரியாது என கூறினார். மேலும் இது அதிமுக உட்கட்சி விவகாரம் எனவும் அதில் சரி, தவறு என நான் கருத்து கூற விரும்பவில்லை என்றும் கூறினார்.

இதையும் வாசிக்க: தர்மம், நீதி வென்றது - உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று இபிஎஸ் அறிக்கை

தொடர்ந்து பேசிய அவர், கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக காவல்துறையின் விசாரணை முடிவுறாத நிலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதுஎனவும் இதனால் மக்கள் வருத்தத்திலும், அதிர்ச்சியில் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மேலும் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் தர வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை மேலும் அதிகரித்திருப்பது கண்டனத்திற்குரியது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே மத்திய அரசு இந்த கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

First published:

Tags: ADMK, CPM balakrishanan, OPS - EPS