போதை ஊசி தகராறு.. இளைஞரை வெட்டிக்கொன்ற 18 வயது சிறுவன் - கோவையில் அதிர்ச்சி

மாதிரிப்படம்

ஜீவானந்தமும், அந்த சிறுவனும் நேற்று இரவு குனியமுத்தூர் பகுதிக்கு சென்று போதை ஊசி வாங்கி வந்துள்ளனர்.

  • Share this:
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே போடிபாளையத்தில் போதை ஊசி வாங்கி தர வற்புறுத்திய இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இளைஞர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே போடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். 22 வயதான இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். ஜீவானந்தத்தின் நண்பரான அதேப்பகுதியை சேர்ந்த 18 வயதான சிறுவன் தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். ஜீவானந்ததிற்கு போதை ஊசி பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஜீவானந்தமும், அந்த சிறுவனும் நேற்று இரவு குனியமுத்தூர் பகுதிக்கு சென்று போதை ஊசி வாங்கி வந்துள்ளனர். இதையடுத்து போடிபாளையத்தில் புதர் மறைவில் அந்த சிறுவன் ஜீவானந்த்திற்கு போதை ஊசி செலுத்தியுள்ளார். ஆனால் போதை ஏறவில்லை என கூறிய ஜீவானந்தம், செல்போனை விற்று மேலும் ஒரு ஊசியை வாங்கி வருமாறு வற்புறுத்தி உள்ளார்.

Also Read: ‘பண்றதெல்லாம் பண்ணிட்டு முழிக்கிறதை பாரு..’- பிடிஆர் போஸ்டும் ட்விட்டர்வாசிகளின் ரியாக்‌ஷனும்

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து வந்து ஜீவானந்தத்தை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து உடலை அதே பகுதியில் விட்டுவிட்டு சிறுவன் தலைமறைவானார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் காலையில் ஜீவானந்தம் சடலத்தை பார்த்த அப்பகுதி மக்கள் மதுக்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில் பயந்து போன சிறுவன் மதுக்கரை போலீசாரிடம் சரணடைந்தார்.

விசாரணையில் போதை ஊசி வாங்க செல்போனை விற்க வற்புறுத்தியதோடு, தனது பெற்றோரை கொன்று விடுவேன் என கூறி மிரட்டியதால் ஜீவானந்தத்தை வெட்டியதாக கூறி உள்ளார். 18 வயதான சிறுவன் குனியமுத்தூர் பகுதியில் ஏற்கனவே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறார் சீர்திருத்த பள்ளியில் இருந்து வந்தவர் என்பது தெரிவந்தது. இது தொடர்பாக மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: