ஆலந்தூரில் அதிமுக - அமமுகவினர் இடையே மோதல்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த கணேசன்  மற்றும் ஆலந்தூர் பகுதி கழக செயலாளர் ஏ.என் லட்சுமிபதி வட்ட கழகச் செயலாளர்கள் பணம் பட்டுவாடா செய்வதை தட்டிக் கேட்டதால் இருபிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: April 18, 2019, 7:52 AM IST
ஆலந்தூரில் அதிமுக - அமமுகவினர் இடையே மோதல்!
இரு அணியினர் மோதல்
Web Desk | news18
Updated: April 18, 2019, 7:52 AM IST
ஆலந்தூரில்  இ.பி.எஸ் , ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த காமராஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பணம் பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அங்கு வந்த அமமுக-வினர் பணப்பட்டுவாட குறித்து தட்டி கேட்டதால் இரு பிரிவினருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி சற்று பதற்றமாக காணப்பட்டது. 

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் ஆலந்தூர் பகுதியில் உள்ள மணப்பாக்கம் ரேஷன் கடை அருகே இ.பி.எஸ் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த காமராஜ் பாண்டியன் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தது. இதனையடுத்து  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த கணேசன்  மற்றும் ஆலந்தூர் பகுதி கழக செயலாளர் ஏ.என் லட்சுமிபதி வட்ட கழகச் செயலாளர்கள் பணம் பட்டுவாடா செய்வதை தட்டிக் கேட்டுள்ளனர்.

அதற்கு காமராஜ் பாண்டியன், இ.பி.எஸ் அணியைச் சேர்ந்தவர்கள் மற்றும் ரவுடிகள் என அனைவரும் சேர்ந்து கணேசனை கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். கல் மற்றும் பீர் பாட்டில்களா, இரும்பு கம்பிகளைக் கொண்டு தாக்கி உள்ளனர். இதில் அவருக்கு மண்டை உடைந்தது.  ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து மணப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... காலத்தின் குரல்: ஆணையம் VS கட்சிகள்


கதையல்ல வரலாறு | தேர்தல்.. .சினிமா... அரசியல்...!

Also see... Lok Sabha Election Voting Live: இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடக்கம்  

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...