Video | அரசு மருத்துவர் - நாம் தமிழர் கட்சி பிரமுகர் இடையே கைக்கலப்பு!

news18
Updated: September 15, 2019, 4:45 PM IST
Video | அரசு மருத்துவர் - நாம் தமிழர் கட்சி பிரமுகர் இடையே கைக்கலப்பு!
வீடியோ காட்சிகள்
news18
Updated: September 15, 2019, 4:45 PM IST
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவரும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளரும் வழக்கறிஞருமான பூவரசன் தனது மனைவி பூவரசிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் போளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் தயாளிஸ்வரன், தனியார் ரத்தப் பரிசோதனை மையத்திற்கு செல்ல பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருடன் பூவரசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.


பின்னர், வாக்குவாதம் முற்றி இருவருக்குமிடையே கைக்கலப்பு உண்டானது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.



இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

 

First published: September 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...