Home /News /tamil-nadu /

மாநகராட்சி சுவரில் கட்சி விளம்பரம் எழுதுவதில் தகராறு.. கோவையில் திமுக -அதிமுகவினர் இடையே மோதல்

மாநகராட்சி சுவரில் கட்சி விளம்பரம் எழுதுவதில் தகராறு.. கோவையில் திமுக -அதிமுகவினர் இடையே மோதல்

கோவையில் சுவர் விளம்பரம் எழுதுவதில் தகராறில் ஈடுபட்ட திமுக, அதிமுகவினர் மீது போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • 1 minute read
  • Last Updated :
கோவை  சுவர் விளம்பரம் எழுதுவது தொடர்பாக திமுக - அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினை சேர்ந்த 4 பேர்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சி நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி சுவரில் கட்சி  விளம்பரம் எழுதுவது தொடர்பாக நேற்று மாலை திமுக - அதிமுகவினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் திமுகவினர் அதிமுக விளம்பரங்களை பெயிண்டால்  அழித்துள்ளனர். அப்போது அங்கு திரண்ட அதிமுகவினர் திமுகவினருடன் மோதலில் ஈடுபட்டனர்.  இரு கட்சியினர் இடையே  ஏற்பட்ட மோதலில்  அதிமுகவினர் தாக்கியதாக 75 வது வார்டு திமுக  பொறுப்பாளர் நியான்குமார்,மற்றும் மகளிரணி வாசுகி ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மாநகராட்சி சுவரில் இருந்த அதிமுக விளம்பரத்தை அழித்ததாக கூறி அதிமுகவை சேர்ந்த சாரமேடு சந்திரசேகர் தலைமையில் வந்த அதிமுகவினர் ,  திமுகவினரை தாக்கியதாக  கூறப்படுகின்றது. இதே போல திமுகவினர் தாக்கியதாக அதிமுகவை சேர்ந்த முத்து, சுபா என்ற இருவர்  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக இரு தரப்பிடமும் புகார் பெற்ற போத்தனூர் போலீசார் திமுகவை சேர்ந்த 4 பேர் மீதும், அதிமுகவை சேர்ந்த 7 பேர் மீதும்  வழக்குபதிவு செய்தனர். மாநகராட்சி தேர்தல் வர இருக்கும் நிலையில் சுவர் விளம்பரங்களுக்காக போட்டி போட்டு இரு அரசியல் கட்சியினரும் மோதிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
First published:

அடுத்த செய்தி