பணம் பங்கிடுவதில் தகராறு... பாமக - தேமுதிகவினர் இடையே மோதல்...! - வீடியோ

பாமக - தேமுதிக மோதல்

 • News18
 • Last Updated :
 • Share this:
  விக்கிரவாண்டியில் இன்று இடைத்தேர்தல் நடந்து வரும் நிலையில் பணம் பங்கிடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக பாமக - தேமுதிகவினர் இடையே கைக்கலப்பு ஏற்பட்டது.

  விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்துவருகிறது. ஒரு சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

  இந்நிலையில், கல்யாணம்பூண்டியில் அமைந்துள்ள 96வது பூத்தில் இயல்பாக வாக்குபதிவு நடைபெற்று வரும் நிலையில் வாக்குச்சாவடிக்கு சுமார் 100 மீட்டர் அருகாமையில் பாமக நிர்வாகி மணிகண்டன் என்பவருக்கும், தேமுதிக நிர்வாகி சேகர் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

  ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த ஒரு காவலர் அவர்களை தடுக்க முயற்சி செய்த போதிலும் அவரையும் மீறி தேமுதிக நிர்வாகிகள் 10 க்கும் மேற்பட்டோர் பாமக நிர்வாகி மணிகண்டனை தாக்கத் தொடங்கினர். உடனே அங்கிருந்து மற்ற காவலர்கள் வந்து அவர்களை மறித்து அனுப்பிவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

  போலீசார் விரைந்து வந்து கூட்டத்தை கலைத்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Also See...

  Published by:Sankar
  First published: