மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு பா.ஜ.கவினர் மரியாதை செய்ய விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்பு - சாலை மறியல், கல்வீச்சால் பரபரப்பு

மாதிரிப் படம்

மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள், பா.ஜ..கவினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 • Share this:
  பாபா சாகேப் என்று அழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்ர் 1891-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் பிறந்தார். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு முதல் சட்டஅமைச்சராக இருந்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர். சட்டத்துறையில் மட்டுமல்லாது பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கியவர். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு வாழ்நாள் முழுவதும் போராடியவர் அம்பேத்கர் ஆவார்.

  அவருடைய பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அவருடைய பிறந்தநாளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நினைவுகூர்ந்துவருகின்றனர்.

  இந்தநிலையில், மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதைசெலுத்திவருகின்றனர்.

  மதுரையிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வருவதாக இருந்தது. அதற்கிடையில், பா.ஜ.கவைச் சேர்ந்த புறநகர் மாவட்டச் செயலாளர் மகா சுசீந்திரன் தொண்டர்களுடன் வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக காத்திருந்தார்.


  அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பா.ஜ.கவினர் அம்பேத்கருக்கு மாலை அணிவிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், பா.ஜ.கவினர் மீது கற்களை வீசி விரட்டியடித்தனர்.

  அதனால், மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து, பாதுகாப்புக்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: