கரூரில் அதிமுக - திமுகவினர் இடையே மோதல் - நாஞ்சில் சம்பத் மீது தாக்குதல்; துணை ராணுவம் குவிப்பு

news18
Updated: April 16, 2019, 4:24 PM IST
கரூரில் அதிமுக - திமுகவினர் இடையே மோதல் - நாஞ்சில் சம்பத் மீது தாக்குதல்; துணை ராணுவம் குவிப்பு
குவிக்கப்பட்டுள்ள துணை ராணுவம்
news18
Updated: April 16, 2019, 4:24 PM IST
தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய உள்ள நிலையில், கரூரில் திமுக - அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்க இருக்கிறது. இதனால், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.

இதனால், அரசியல் கட்சிகள் இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கரூர் பேருந்து நிலையம் அருகே இறுதி கட்ட பிரசாரம் செய்ய திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளும் அனுமதி கேட்டிருந்தனர்.

இதனால், இரண்டு கட்சி தொண்டர்களும் பேருந்து நிலையம் அருகே குவிந்திருந்தனர். அப்போது, இரு தரப்பிலும் வார்த்தைகள் வர மோதல் வெடித்தது. இரண்டு பேரின் மண்டை உடைக்கப்பட்டது.

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு பிரசாரம் செய்ய வந்த நாஞ்சில் சம்பத் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாஞ்சில் சம்பத்


இதனை அடுத்து, நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி கரூரில் அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே இறுதிக்கட்ட பிரசாரம் செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர் அன்பழகன் தடை உத்தரவு பிறப்பித்தார்.

உத்தரவையடுத்து கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா துணை ராணுவம் மற்றும் காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகளும் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பேருந்துகளும் மாற்று வழித்தடத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

சம்பவ இடத்தில் திருச்சி மண்டல காவல் தலைவர் வரதராஜன்,உதவி காவல் தலைவர். லலிதா லட்சுமி, கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜசேகரன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திலிருந்து அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கரூர் பேருந்து நிலைய பகுதி பதட்டமாக உள்ளது. மேலும் கண்ணீர் புகை குண்டு வீ சும் வஜ்ரா வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...