சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில், தமிழக தேர்வர்களின் தேர்ச்சி மிகக் குறைவாக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் கல்வியில் முன்னணி மாநிலமாக விளங்கும் தமிழகத்திலிருந்து, ஏன் சிவில் சர்வீஸ் தேர்வில் மட்டும் சாதிக்க முடியவில்லை என்ற கேள்வி ஒவ்வொரு ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியாகும் போதும் எழுகிறது. கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே தமிழக தேர்வர்கள் தேர்வாகியுள்ளனர். மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 685 பேரில் 27 பேர் மட்டுமே, தமிழகத்திலிருந்து தேர்வாகி இருக்கின்றனர்.
2014ஆம் ஆண்டு 10 சதவிகிதமாக இருந்த தமிழக தேர்வர்களின் தேர்ச்சி விகிதம் அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக குறைந்து 2017ஆம் ஆண்டு 4 சதவிகிதமாக இருந்தது. ஆனால் எண்ணிக்கையில் அடிப்படையில் 42 பேர். அடுத்த ஆண்டுகளில் சற்று அதிகரித்த தேர்ச்சி பெற்றோரின் எண்ணிக்கை 2020ல் மீண்டும் குறைந்து தேர்ச்சி விகிதம் 4.7 சதவிகிதமானது. எண்ணிக்கையில் 36 பேர் தேர்வாகினர். ஆனால், இந்தாண்டு 27 பேர் மட்டுமே தேர்வாகி உள்ளனர். அதாவது 3.94% பேர் மட்டும். எண்ணிக்கையில் அடிப்படையிலும் சரி, சதவிகித அடிப்படையிலும், இந்தாண்டு தேர்ச்சி பெற்றோர் மிகக் குறைவாக உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த எண்ணிக்கைக் கணக்கீடு என்பதும், தோராய அடிப்படியிலேயே கணக்கிடப்படுகிறது. இறுதி முடிவுகளை வெளியிடும்போது மாநில வாரியாக முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படாதது, இந்த தோராயக் கணக்கீட்டிற்குக் காரணமாக அமைகிறது.
சிவில் சர்வீஸ் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படுவது; முறையான தனிப்பட்ட பயிற்சி கிடைக்காமல் போனது; ஆய்ந்தறியும் வகையிலான வினாக்களுக்கேற்ப தயார்படுத்தாத கல்வி முறை போன்றவற்றைக் காரணங்களாகக் கூறுகின்றனர் துறை சார்ந்தவர்கள்.
செய்தியாளர்: அபிநயா
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.