முகப்பு /செய்தி /தமிழ்நாடு / செங்கல் இல்லை... மணல் இல்லை... வீடு கட்டும் பொறியாளர்..! எப்படி சாத்தியம்?

செங்கல் இல்லை... மணல் இல்லை... வீடு கட்டும் பொறியாளர்..! எப்படி சாத்தியம்?

கட்டுமான வீடு

கட்டுமான வீடு

செங்கல், மணல் பயன்படுத்தி கட்டிடங்களை கட்டும்போது, சதுர அடி ஒன்றுக்கு 2 ஆயிரத்து 200 ரூபாய் வரை செலவு ஆகிறது.

  • Last Updated :

திருவாரூர் மாவட்டத்தில் செங்கல் மற்றும் மணல் இல்லாமல் கட்டிட கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறார் பொறியாளர் அருண்குமார் . எவ்வாறு கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படுகிறது என்பதை விளக்குகிறது இந்தக் கட்டுரை. 

திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த கட்டுமானப் பொறியாளர் அருண்குமார் கட்டடத்தின் அடித்தளம், மேல்தளம், தூண் உள்ளிட்டவற்றை கம்பிகளை வைத்து கான்கிரீட் கலவை கொண்டே கட்டி முடிக்கிறார். இதேபோல, சுற்றுச்சுவர் முழுவதையும் எம் சாண்ட்-டுடன் கூடிய கான்கிரீட் கலவையைப் பயன்படுத்தி கட்டிவிடுகிறார்.

இதற்காக பிரத்யேகமாக தாங்கு பலகைகள், பிளைவுட், அலுமினியம் ஆகியவற்றை வடிவமைத்துள்ளார். திருவாரூர், இடும்பாவனம், பெருகவாழ்ந்தான் ஆகிய பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் மூன்று வீடுகளைக் கட்டி முடித்துள்ளார். இயற்கைப் பேரிடர்களை தாங்கும் வகையில் இந்த கட்டிடங்கள் அமையும் என்கிறார் அருண்குமார்.

”செங்கல், மணல் பயன்படுத்தி கட்டிடங்களை கட்டும்போது, சதுர அடி ஒன்றுக்கு 2 ஆயிரத்து 200 ரூபாய் வரை செலவு ஆகிறது. புதிய முறையால் ஆயிரத்து 800 ரூபாய்க்கு கட்டுமானத்தை முடிக்க முடியும். இதனால், பொதுமக்களும் ஆர்வமுடன் இந்த முறையை பின்பற்ற தயாராகி உள்ளனர்” என்கிறார் அருண்குமார்.

Also see:

top videos

     

    First published: