பெண்களுக்கு வழங்கும் இலவச பேருந்து டிக்கெட்... இப்படியும் ஒரு மோசடியா...!

இலவச பயணச் சீட்டு

மகளிர் உள்ளிட்டோரின் சமூக நலனுக்காக அரசு கொண்டுவந்த இந்த திட்டத்தை, சில நடத்துனர்கள் தங்கள் சுய லாபத்திற்காகப் பயன்படுத்தவும் ஆரம்பித்துள்ளனர்.

 • Share this:
  நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள நிலையில், அதை சில நடத்துனர்கள் தவறாக பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

  நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. அதன்படி, திமுக ஆட்சிக்கு வந்த அன்றே, முதல்வர் முக ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவில், இந்த வாக்குறுதி நடைமுறைக்கு வந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதன்படி, மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு உதவிக்கு உடன் பயணிக்கும் ஒரு நபர் ஆகியோருக்கு இலவச பேருந்து பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. அதற்காக 4 வகையாக டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. அதற்கான உரிய டிக்கெட் பெற்று பயணித்து வருகின்றனர்.

  மாதிரிப்படம்


  மகளிர் உள்ளிட்டோரின் சமூக நலனுக்காக அரசு கொண்டுவந்த இந்த திட்டத்தை, சில நடத்துனர்கள் தங்கள் சுய லாபத்திற்காகப் பயன்படுத்தவும் ஆரம்பித்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெறியாகி இருக்கின்றது. சேலம் ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்ற டவுன் பஸ் ஒன்றை டிக்கெட் பரிசோதகர்கள் நிறுத்தி பரிசோதனை செய்த போது, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 21 ஆண் தொழிலாளர்களின் கைகளில் பெண்களுக்கு வழங்கப்படும் இலவச டிக்கெட் இருப்பதை டிக்கெட் பரிசோதகர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  இது குறித்து அவர்களிடம் விசாரித்தபோது, நடத்துனர் இந்த டிக்கெட்டுகளை தங்களுக்கு கொடுத்துவிட்டு ஒவ்வொருவருக்கும் தலா 6 ரூபாய் வீதம் வசூல் செய்ததாக கூறியுள்ளனர். அவர்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்வர்கள், என்பதால் இது இலவச டிக்கெட் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நடத்துனர், இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

  Read More : ஹெச்.சி.எல். நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்து ஷிவ் நாடார் ராஜினாமா

  இது குறித்து மண்டல போக்குவரத்து மேலாளர் லட்சுமணனுக்கு புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட நடத்துனர் நவீன்குமார் என்பவர் பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது துறை ரீதியாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.

  Must Read : அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா- உடனடியாக வெளியேறிய எடப்பாடி பழனிசாமி: மருத்துவமனையில் பரபரப்பு!

  “எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க” என்று நடிகர் வடிவேலு ஒரு படத்தில் நகைச்சுவையாகக் கூறி ஏமாற்று வேலைகளில் ஈடுபடுபவர்களை சுட்டிக்காட்டுவார். அப்படியிருக்கிறது நடத்துனரின் இந்த செயல். இது போல ஒரு சிலர் செய்யும் தவறுகளால் நேர்மையாகப் பணியாற்றும் பலருக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.
  Published by:Suresh V
  First published: