குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டிச. 23-ல் பிரமாண்ட பேரணி - மு.க.ஸ்டாலின்

குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டிச. 23-ல் பிரமாண்ட பேரணி - மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
  • Share this:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 23-ம் தேதி சென்னையில் பிரமாண்ட பேரணி நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், “குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.


இதை வலியுறுத்தி சென்னையில் வரும் 23-ம் தேதி அனைத்துக் கட்சிகளின் பேரணி தொடங்கும். இதில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்துக் கட்சிகளும் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும்.



குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு அகில இந்திய அளவில் எதிர்ப்பு இருக்கிறது. எனவே இதற்குப் பிறகாவது மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும். நாட்டில் அமைதியைக் குலைக்கும் விதமாக இந்தச் சட்டம் அமைந்திருக்கிறது. அண்டை நாடுகள் பட்டியலில் இலங்கை விடுபட்டிருப்பது ஏன்? அகதியர்களாக வரும் மக்களில் இஸ்லாமியர்களை மட்டும் பிரிப்பது ஏன்?தமிழின துரோகிகளாக அதிமுகவினர் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். அவர்களை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். அடுத்த கட்டத்துக்கு போராட்டத்தை எடுத்துச் செல்வது பற்றி மீண்டும் ஆலோசனை நடத்துவோம். ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் என்னிடம் போனில் பேசினார். கூட்டணி கட்சிகள் மட்டுமே இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர். தேவைப்பட்டால் மற்றவர்கள் பின்னர் அழைக்கப்படுவர்” என்றார்.
First published: December 18, 2019, 12:28 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading