Home » News » Tamil-nadu » CISF HAS ORDERED TO ENQUIRY ABOUT KANIMOZHI COMPLAINT REGARDING HINDI LANGUAGE SKD

இந்தி தெரியாததால் கனிமொழியிடம் இந்தியரா என்று கேள்வி எழுப்பிய விவகாரம்- விசாரணைக்கு உத்தரவிட்ட சி.ஐ.எஸ்.எஃப்

தி.மு.க எம்.பி கனிமொழியிடம் இந்தியரா என்று மத்திய தொழிலக பாதுகாப்பு அதிகாரி கேள்வி எழுப்பியது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று சி.ஐ.எஸ்.எஃப் தெரிவித்துள்ளது.

இந்தி தெரியாததால் கனிமொழியிடம் இந்தியரா என்று கேள்வி எழுப்பிய விவகாரம்- விசாரணைக்கு உத்தரவிட்ட சி.ஐ.எஸ்.எஃப்
திமுக எம்.பி. கனிமொழி
  • Share this:
விமானநிலையத்தில் தனக்கு நடந்த அனுபவத்தை எம்.பி கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், ‘இன்று விமானநிலையத்தில், எனக்கு இந்தி தெரியாது. என்னிடம் தமிழிலோ, இந்தியிலோ பேசுங்கள் என்று மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரியிடம் நான் கூறியபோது, அவர் உடனே நீங்கள் இந்தியரா? என்று கேள்வி எழுப்பினார். இந்தி தெரிந்திருந்தால் இந்தியர் என்பது எப்போதிலிருந்து ஆனது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  மேலும், இந்தப் பதிவில் இந்தித் திணிப்பு என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

கனிமொழியின் ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. அவருடைய ட்விட், தேசிய அளவில் செய்திகளில் இடம் பிடித்தது.

இந்தநிலையில், கனிமொழியின் புகாருக்கு விளக்கமளித்துள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படை(CISF)ட்விட்டர் பதிவில்,"இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். எந்த ஒரு குறிப்பிட்ட மொழியையும் கட்டாயப்படுத்துவது மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கொள்கை கிடையாது’என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
First published: August 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading