Home /News /tamil-nadu /

உடனுக்குடன் டோக்கன் வழங்கி இணைய வழியில் நேரடி நெல் கொள்முதல் : நுகர்பொருள் வாணிப கழகம் சுற்றறிக்கை

உடனுக்குடன் டோக்கன் வழங்கி இணைய வழியில் நேரடி நெல் கொள்முதல் : நுகர்பொருள் வாணிப கழகம் சுற்றறிக்கை

நெல் கொள்முதல்

நெல் கொள்முதல்

Direct Purchase Centres : விவசாயிகளின் நலன் கருதி இணைய வழி பதிவு முறையின் மூலம், விரைவில் நெல்லை கொள்முதல் செய்ய செய்திட நடவடிக்கை.

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இணைய வழியாக பதிவு செய்ய நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லினை எளிதில் விற்பனை செய்திட இணையவழி பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டு 01.01.2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், விவசாயிகளின் நலன் கருதி இணைய வழி பதிவு முறையின் மூலம் விரைவில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் ஆவணம், ஆதார் நகல் உள்ளிட்ட ஆவணங்களை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

    Must Read : நகர்புற உள்ளாட்சி தேர்தல் : திமுக மாவட்ட செயலாளர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு

    நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் பட்டியல் எழுத்தர்கள் இணைய வழியில் பதிவேற்றம் செய்து உடனுக்குடன் டோக்கன் வழங்கி முன்னுரிமை அடிப்படையில் கொள்முதல் செய்திட சம்பந்தப்பட்ட பட்டியல் எழுத்தர்கள், கொள்முதல் அலுவலர்கள் மற்றும் துணை மேலாளர்கள் (கொள்முதல் & இயக்கம்) அவர்களுக்கு அறிவுறுத்துமாறு முதுநிலை மண்டல மேலாளர்கள் / மண்டல மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Farmers

    அடுத்த செய்தி