முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த சினிமா நடிகர் கைது

சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த சினிமா நடிகர் கைது

சிவமணி

சிவமணி

சிவமணி மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விசாரிக்க போலீஸார் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பண்ருட்டி அருகே காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த சினிமா நடிகர் உள்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தை சிவமணி(நடிகர்)வயது 38. இவர் திட்டமிட்டப்படி என்ற படத்தை தயாரித்து, அவரே நடித்துள்ளார். சிவமணி மீது கொலை, மணல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகள் தொடர்பாக சிவமணியிடம் விசாரிப்பதற்காக புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் நந்தகுமார், உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சிவமணி வீட்டுக்கு சென்று விசாரணை நடித்தி வந்துள்ளனர். அப்போது உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை சிவமணி மற்றும் அவருடன் இருந்தவர்கள் ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததோடு, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாக புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சினிமா நடிகர் சிவமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பெரிய எலந்தம்பட்டை சேர்ந்த திருநாவுக்கரசு (49), கரும்பூரை சேர்ந்த ஸ்ரீதரன் (37), வீரப்பெருமாநல்லூரை சேர்ந்த பாக்கியராஜ் (39) ஆகியோரை கைது செய்தனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Actor, Criminal case, Police