ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை மழை வெள்ளத்தில் பாட்டுப்பாடி படகு ஓட்டி மகிழ்ந்த மன்சூர் அலிகான்

சென்னை மழை வெள்ளத்தில் பாட்டுப்பாடி படகு ஓட்டி மகிழ்ந்த மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகான்

சென்னை மழையில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீரில் நடிகர் மன்சூர் அலிகான் பாட்டுப்பாடும் வீடியோ இணையத்தில் வைரல்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

 சென்னை மழை வெள்ளத்தில்  பாட்டுப்பாடி படகு ஓட்டி மகிழ்ந்த மன்சூர் அலிகானின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்றிரவு முதல் தற்போது வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

மழையின் காரணமாக சென்னை சாலைகளும், தாழ்வான பகுதிகளிலும், மற்றும் வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளதுமேலும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சுழ்ந்ததால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதி அடைந்துள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான் குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதில் பாத் டப்பில் கப்பல் ஓட்டும் மன்சூர் அலிகானின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. பொறந்தா தமிழ்நாட்டுல பொறக்கனும்.. சென்னை தண்ணியில மிதக்குனும்.. தமிழனாக பிறக்கனும் சென்னையில் கார் ஓட்டி மகிழனும்.. எனப் பாட்டுப்பாடும்  வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Actor Mansoor ali khan, Mansoor ali khan