ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கிறிஸ்துவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சர்ச்சுகள் தீர்மானிக்கிறது; அர்ஜூன் சம்பத்

கிறிஸ்துவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சர்ச்சுகள் தீர்மானிக்கிறது; அர்ஜூன் சம்பத்

அர்ஜூன் சம்பத்

அர்ஜூன் சம்பத்

சர்ச்சுகளிலே அரசியல் தீர்மானிக்கப்படுவது என்பது மதசார்பற்ற தன்மைக்கு ஆபத்தானது. கிறிஸ்துவ நிறுவனங்கள் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

திமுக அரசை கண்டித்து அதிமுக நடத்தும் போராட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

பின்னர் அவர் அர்ஜீன் சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, தமிழக நதிகளை காப்பதற்காக 950 கோடி ரூபாயை ஒதுக்க நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் எழுத்துபூர்வமான பதிலை வழங்கி உள்ளார். இது தமிழகத்திற்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம். நெல்லை, கோவை, சென்னை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நதிகளை பாதுகாக்க இதனை தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Also read: பெகாசஸ் உளவு செயலி குறித்து சர்வதேச விசாரணை வேண்டும்: திருமுருகன் காந்தி

தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல், மத்திய அரசுடன் இனக்கமாக செயல்பட்டு தமிழக வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார்.

ஜார்ஜ் பொன்னையா, அவர் பேசிய பேச்சுக்காக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கிறிஸ்துவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சர்ச்சுகள் தீர்மானிக்கிறது. ஆயர்கள் பேரவையின் கருத்து என்ன?சர்ச்சுகளை மதவழிபாட்டிற்காக பயன்படுத்த வேண்டும். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பாதிரியார் சொல்வது என்றால், ஒட்டு மொத்த கிறிஸ்துவர்களையும் அரசியல் நடவடிக்கைகள் மூலமாக கிறிஸ்துவ மத நிறுவனங்கள் கட்டுப்படுத்துவது என்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சர்ச்சுகளிலே அரசியல் தீர்மானிக்கப்படுவது என்பது மதசார்பற்ற தன்மைக்கு ஆபத்து. கிறிஸ்துவ நிறுவனங்கள் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும், முதலமைச்சர் கிறிஸ்துவ சபைகளை அழைத்து பேசவேண்டும் மற்றும் தேர்தல் ஆணையம் இந்த விசயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி அதிமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி  ஆதரவு தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

Published by:Esakki Raja
First published:

Tags: ADMK, Arjun Sampath, DMK