Home /News /tamil-nadu /

சுங்குடி சேலைக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும் - எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கை

சுங்குடி சேலைக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும் - எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கை

 M.P. சு.வெங்கடேசன்

M.P. சு.வெங்கடேசன்

மத்திய அமைச்சர் கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 2026 அக்டோபரில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எழுத்துப்பூர்வமான வாக்குறுதி அளித்துள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பிரபலமான பாரம்பரிய  உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க "ஒரு நிலையம் ஒரு பொருள்" என்ற திட்டத்தின் கீழ் மதுரை ரயில் நிலையத்தில் சுங்குடி சேலை விற்பனையை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.

    இதை தொடர்ந்து பேசிய அவர் , இந்திய ரயில்வே நிர்வாகம் "ஒரு நிலையம் ஒரு பொருள்" என்ற திட்டத்தின் கீழ் பாரம்பரிய பொருள்கள் விற்பனை செய்யப்படுவதன் அடிப்படையில் மதுரையின் சுங்குடி சேலை விற்பனையை துவங்கியுள்ளது. இந்தியா முழுவதும் 4,000 ரெயில் நிலையங்களில் 4,000  பொருள்கள் என்ற அடிப்படையில் பாரம்பரிய பொருட்களை மக்களுக்கு கொண்டு செல்லும் நோக்குடன் தொடங்கப்பட்டுள்ளது.

    இதில் மதுரை கோட்டத்தில் 19 ரயில் நிலையங்களில் 19 பொருட்கள் அடையாளம் காணப்பட்டு விற்பனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பாரம்பரியமிக்க மதுரை சுங்குடி சேலைக்கு ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாக உயர்த்த ஒன்றிய அரசு முயற்சி செய்தனர். அப்போது  நிதி அமைச்சரை சந்தித்து 5 சதவீதமாக இருக்க நடவடிக்கை எடுக்கபட்டது. பாரம்பரிய சுங்குடி சேலை உற்பத்தியை பாதுகாக்க தொடர்ந்து சுங்குடி சேலைக்கு முற்றிலும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைபாடு என தெரிவித்துள்ளார்.

    மேலும் , ஜிப்மர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அப்பட்டமான சட்டமீறல் ஆக தெரிகிறது. இந்தியில் மட்டுமே அனைத்து கோப்புகளும் இருக்கும் என்று நாடாளுமன்ற மொழியியல் குழுவிற்கு உறுதியளிக்கிற உரிமையை ஜிப்மர் நிர்வாகத்திற்கு யார் வழங்கியது? என்ற கேள்வி எழுகிறது. இந்த சுற்றறிக்கை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியை திணிக்கும் முயற்சிக்கு எதிராக தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் கண்கள்  விழிப்புடன் இருக்கும்.

    ALSO READ |  ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றம்... மயிலாப்பூர், மந்தைவெளியில் மாற்று வீடுகள் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் அனைத்து மொழிகளுக்கான உரிமையை நிலை நிறுத்துவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக விழிப்புணர்வுடன் பணியாற்றுவோம். முதன்முறையாக மத்திய அமைச்சர் கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 2026 அக்டோபரில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எழுத்துப்பூர்வமான வாக்குறுதி அளித்துள்ளார். ஜப்பானின் ஜைக்கா எய்ம்ஸ்க்கான நிதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் கிடைத்திருக்கிறது.

    மத்திய அரசின் நிதி பங்கீடுதலுக்கு ஒப்புதல்  கிடைக்கப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மக்கள் பயன்பாட்டிற்கு வருவதை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம்’ என்று தெரிவித்தார்.

    செய்தியாளர் : கருணாகரன்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: GST, Su venkatesan

    அடுத்த செய்தி