சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்லூரியில் 67 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், தாம்பரம் காவல் ஆணையர் ரவி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. நேற்று 2731 பேர் புதிய தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 50 சதவீதத்திற்கு மேலாக சென்னையில் பதிவாகியுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1489 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை குரோம்பேட்டையில் எம்.ஐ.டி (Madras institute of technology). கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இங்கு விடுதியில் தங்கி கல்வி பயிலும் சில மாணவர்களுக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது.
எம்ஐடி கல்லூரி நிறுவனத்தில் உள்ள மாணவர்கள் 1417 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 67 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாதிப்புக்குள்ளான மாணவர்களில் பலபேர் கல்லூரி விடுதியில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா பரவல் அதிகமாகும் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
மேலும் தாம்பரம் மாநகராட்சி சார்பில் கல்லூரியை சுற்றியும் கல்லூரி வளாகத்திலும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா பரவலை தொடர்ந்து எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்திற்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் தாம்பரம் காவல் ஆணையர் ரவி ஆகியோர்குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். சுகாதார அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மேலும்படிக்க: ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு - தமிழக அரசு அறிவிப்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.