கிறிஸ்டி நிறுவனம் ரூ 1,350 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு

news18
Updated: July 11, 2018, 12:35 PM IST
கிறிஸ்டி நிறுவனம் ரூ 1,350 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு
கோப்புப் படம்
news18
Updated: July 11, 2018, 12:35 PM IST
கிறிஸ்டி ப்ரைட்கிராம் நிறுவனம் ரூ. 1,350 கோடி வரி ஏய்ப்பு செய்தது, வருமான வரித்துறையின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் முட்டை, சத்துமாவு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை ஒப்பந்தப் புள்ளி அடிப்படையில் கிறிஸ்டி ப்ரைடுகிராம் நிறுவனம் வினியோகம் செய்து வருகிறது. அந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய 70-க்கும் அதிகமான இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், 5 நாட்களாக நடந்த சோதனையில், கணக்கில் வராத 17 கோடி ரூபாய் மற்றும் 10 கிலோ தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் கிறிஸ்டி ப்ரைடு கிராம் நிறுவனம் மலேசியா, சிங்கப்பூரில் முதலீடு செய்துள்ளது தொடர்பாக ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்களின் இல்லத்திலிருந்து 100-க்கும் அதிகமான பென்டிரைவ்கள், ஹார்டு டிஸ்க்குகள் ஆகிவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தி வருவதாகவும் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் 5 நாட்களாக நடைபெற்ற சோதனை குறித்து வருமான வரித்துறையின் அதிகாரிகள் தெரிவித்த தகவலில், கிறிஸ்டி ப்ரைட்கிராம் நிர்வாகம் ரூ. 1,350 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். மேலும் அந்த வரியை திரும்ப செலுத்த  கிரிஸ்டி ப்ரைடு நிர்வாககம் ஒப்புக்கொண்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...