ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Christmas | கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் கேக் செய்ய ரெசிபி!

Christmas | கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் கேக் செய்ய ரெசிபி!

Chocolate Cake | கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சாக்லேட் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க

Chocolate Cake | கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சாக்லேட் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க

Chocolate Cake | கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சாக்லேட் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க

  • 2 minute read
  • Last Updated :

கிறிஸ்துமஸ் என்றாலே கேக் ஸ்பெஷல்தான் அதிலும் நம்மில் பலருக்கும் மிகவும் பிடித்தது சாக்லேட் கேக்தான்.  அதனை எப்படி தயார் செய்வது என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருட்கள் :

மைதா மாவு - 50 கிராம்

கோகோ பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்

பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்

சமையல் சோடா - ஒரு சிட்டிகை

வெண்ணெய் - 75 கிராம்

கிராம்பு, முட்டை - 2

சர்க்கரை - 100 கிராம், தனியாக 20 கிராம் கேரமல் செய்ய

காய்ச்சி ஆறவைத்த பால் - தேவையான அளவு

பேரீச்சை - 30 கிராம்

டூட்டி ஃப்ரூட்டி- 30 கிராம்

உலர் திராட்சை, முந்திரி - 30 கிராம்

பாதாம், வால்நட் - தலா 20 கிராம்

ஆரஞ்சு தோல் துருவல் - கால் டீஸ்பூன்

வெனிலா எசென்ஸ் - 5 சொட்டுகள்

பட்டை - ஒரு சிறிய துண்டு

ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - கால் டீஸ்பூன் (விரும்பினால்)

ஸ்டாபெர்ரி - சிறிதளவு

சாக்லேட் கேக் - கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்

செய்முறை:

முதலில் பாதாம், வால்நட், முந்திரி, டூட்டி ஃப்ரூட்டியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பின்னர் பேரீச்சம் பழத்தை கொட்டை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா, உப்பு, கோகோ பவுடர் சேர்த்துச் சலித்து தனியாக வைத்து கொள்ளவும்.

ஒரு டீஸ்பூன் மைதா மாவுடன் பாதாம், முந்திரி, வால்நட், பேரீச்சை, டூட்டி ஃப்ரூட்டி, ஆரஞ்சு தோல் துருவல், உலர்திராட்சை சேர்த்துக் கலக்கவும். கிராம்புடன் பட்டை, ஜாதிக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் வாணலியில் கேரமல் செய்யக் கொடுத்துள்ள சர்க்கரையைச் சேர்த்து லேசாகக் கருகும் வரை சிறு தீயில் வைத்துக் கிளறவும். சர்க்கரை பிரவுன் நிறமாக மாறும்போது கவனமாகக் கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். நன்றாகக் கரைந்ததும் இறக்கி ஆறவிடவும். இதுவே கேரமல் சிரப்.

அதன் பிறகு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். அதனுடன் வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக நுரை வரும் வரை பிளெண்டரால் அடிக்கவும். பிறகு, மைதா கலவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கரண்டியால் மெதுவாகக் கலக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்துக்கொள்ளலாம். பிறகு கேரமல் சிரப், வெனிலா எசென்ஸ், நட்ஸ் கலவை, பொடித்த கிராம்பு கலவைச் சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.

குக்கரில் ஒரு கப் தூள் உப்பைப் பரப்பவும். உப்பின் மீது தட்டு வைத்து குக்கரை மூடி மூன்று நிமிடங்கள் வரை சூடாக்கவும். பிறகு ஆறு இன்ச் அளவு கேக் பானில் சிறிதளவு வெண்ணெய் தடவி, மைதா மாவைத் தூவவும். இது கேக் ஒட்டாமல் வர உதவும்.

மேலும் படிக்க: ஒமைக்ரான்: கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்ய WHO அறிவுரை

இதில் கேக் மாவை முக்கால் பாகம் வரை ஊற்றவும். பிறகு லேசாகத் தட்டி குக்கர் மூடியைத் திறந்து பாத்திரத்தை உள்ளே வைத்து மீண்டும் மூடி, சிறு தீயில் முப்பது நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும். தேவையானால் மீண்டும் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கலாம். பிறகு கேக் பாத்திரத்தை வெளியே எடுத்து ஆறவிடவும். பானில் இருந்து கேக்கை வெளியே எடுத்து துண்டுகளாக்கிப் பரிமாறலாம். இப்போது சூப்பரான சாக்லேட் கேக் ரெடி.

மேலும் படிக்க... கிருஸ்மஸ்க்கு இந்த 5 வகையான கேக்குகளை செய்து பாருங்கள்...

First published: