முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி ரெசிபி!

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி ரெசிபி!

Christmas Biriyani |  கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை மறக்காமல் செய்து பாருங்கள்...

Christmas Biriyani | கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை மறக்காமல் செய்து பாருங்கள்...

Christmas Biriyani | கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை மறக்காமல் செய்து பாருங்கள்...

  • 1-MIN READ
  • Last Updated :

    அசைவ பிரியர்களுக்காக அட்டகாசமான சுவையில்  கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    ஆட்டுக்கறி - 500 கிராம்

    பாஸ்மதி அரிசி - 500 கிராம்

    பட்டை - 4 துண்டு

    கிராம்பு - 4

    ஏலக்காய் - 4

    பிரியாணி இலை - 2 துண்டு

    இஞ்சி, பூண்டு அரைத்தது - 3 தேக்கரண்டி

    வெங்காயம் - 3

    பச்சை மிளகாய் - 6

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி இலை - 1 கப்

    புதினா இலை - 4 மேஜைக்கரண்டி

    தக்காளி - 1

    வெங்காயம் - 2

    தேங்காய்ப்பால் - 1 கப்

    தண்ணீர் - 4 கப்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 50 மி.லி.

    நெய் - 2 மேஜைக்கரண்டி

    ஸ்டவ்வில் சூடாக்கப் போகிறீர்கள் என்றால் முதலில் சாதத்தில் ஒரு கையளவு தண்ணீர் ஊற்றி அதன் மேல் தெளியுங்கள். ஏனெனில் இந்த தண்ணீர்தான் சாதத்தை புதிதாக வடித்ததுபோல் ஈரப்பதத்தோடு பளபளவென இருக்கும். இல்லையெனில் வறண்டு இருக்கும். ஈரம் இல்லாமல் தொண்டையில் அடைத்துக்கொள்ளும் அளவிற்கு வறண்டு இருக்கும்.

    செய்முறை:

    மட்டனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிது உப்பு போட்டு, குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும். அரிசியை 10 நிமிடங்கள் ஊறவிடவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.

    தக்காளியை 6 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு வதக்கவும்.

    அதன்பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். இஞ்சி, பூண்டு அரைத்தது போட்டு வதங்கியதும் கொத்தமல்லி இலை, புதினா, மிளகாய்த்தூள் தக்காளி போட்டு வதக்கவும். தேங்காய்ப்பால், தன்ணீர் ஊற்றி உப்பு, மீதமுள்ள மஞ்சள் தூள் போட்டுக் கிளறவும்.

    கொதித்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி விடவும். குக்கரை மூடி, வெயிட் போடவும். 2 விசில் வந்ததும் குக்கரை இறக்கி வைக்கவும். வெயிட் எடுத்த பின் குக்கரைத் திறந்து நெய் ஊற்றி மெதுவாகக் கிளறி, மூடி வைக்கவும். இப்போது சூடாகப் பரிமாறலாம். சூப்பரான மட்டன் பிரியாணி ரெடி.

    மேலும் படிக்க... ஆம்பூர் சிக்கன் பிரியாணி வீட்டிலேயே செய்வது எப்படி?

    First published: