முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Christmas | கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வீட்டிலேயே எளிய முறையில் சாக்லேட் செய்வது எப்படி தெரியுமா?

Christmas | கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வீட்டிலேயே எளிய முறையில் சாக்லேட் செய்வது எப்படி தெரியுமா?

சாக்லேட் அதிக சத்துக்கள் நிறைந்தது, குறிப்பாக அதிக கோகோ உள்ளடக்கம் கொண்ட டார்க் சாக்லேட். இது தாதுக்களால் ஏற்றப்பட்டு சரியான அளவு கரையக்கூடிய நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளது. டார்க் சாக்லேட் உண்மையில், துத்தநாகத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும்.

மேலும் படிக்கவும் ...
 • Last Updated :

  சாக்லேட் ஐஸ்கிரீம், சாக்லேட் கேக், சாக்லேட் மில்க் ஷேக் என எதனை தேர்ந்தெடுத்தாலும் அதில் சாக்லெட் சுவையில் இருக்கும் பொருட்களைத் தான் குழந்தைகள் முதலில் தேர்வு செய்வார்கள். அதனால் பல அம்மாக்களும் சாக்லேட் செய்வது சுலபமாக இருந்தால் அதனை வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாமே என்று நினைப்பார்கள். வாங்க இந்த 2 பொருட்களை மட்டுமே வைத்துக் கொண்டு  எளிய முறையில் சாக்லேட் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

  தேவையான பொருட்கள்:

  மில்க்மேட் – ஒரு டப்பா,

  கொக்கோ பவுடர் – 50 கிராம்,

  வெண்ணை – 2 ஸ்பூன்

  செய்முறை:

  முதலில் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு நான்ஸ்டிக் பேனை வைத்துக்கொள்ள வேண்டும். பேன் நன்றாக சூடானதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொண்டு ஒரு டப்பா மில்க்மேட் முழுவதையும் அதனுள் சேர்த்துக் கொள்ளவேண்டும். ஒரு மரக்கரண்டியை பயன்படுத்தி மில்க் மேடை நன்றாக கலந்துவிட வேண்டும். சிறிது நேரத்தில் அது கொஞ்சம் கொஞ்சமாக இருந்த நிலையில் இருந்து சற்று இலக ஆரம்பிக்கும்.

  மில்க் மேட் இலகி வரும் பொழுது 50 கிராம் கோகோ பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும். கொக்கோ பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக சலித்து மில்க் மெடுடன் சேர்த்து கலந்து விடவேண்டும். கோகோ பவுடரை ஒரே நேரத்தில் முழுவதுமாக சேர்த்து விடாமல் இடைவெளி விட்டு சிறிது, சிறிதாக சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

  மேலும் படிக்க... கிருஸ்மஸ்க்கு இந்த 5 வகையான கேக்குகளை செய்து பாருங்கள்...

  கொக்கோ பவுடரை முதலில் சேர்க்கும் பொழுது அது மில்க் மேடில் ஓட்டாமல் இருப்பது போன்று தோன்றும். ஆனால் கரண்டியைப் பயன்படுத்தி நன்றாக கலந்து கொண்டு இருக்கும் பொழுது கொக்கோ பவுடர் மில்க் மேடில் நன்றாக கலந்து சாக்லேட் போன்ற கெட்டியான பதத்திற்கு வந்துவிடும்.

  மேலும் படிக்க... Christmas | திராட்சை ஒயின் வீட்டிலேயே செய்வது எப்படி?

  அதன்பிறகு இதனுடன் 2 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கலந்து விட்டு அடுப்பை அனைத்து விட வேண்டும். இந்த சாக்லெட்டை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொண்டு, உங்களுக்கு தேவையான வடிவத்தில் ஊற்றி சாக்லேட்-டை பிரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும் பொழுது குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள். ஹோம் மேட் சாக்லேட் ரெடி.

  top videos

   மேலும் படிக்க... கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் கேக் செய்ய ரெசிபி!

   First published: