• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நீட் ஆய்வு குழு- மேல்முறையீடு செய்யப்போவதில்லை: கரு.நாகராஜன் அறிவிப்பு!

நீட் ஆய்வு குழு- மேல்முறையீடு செய்யப்போவதில்லை: கரு.நாகராஜன் அறிவிப்பு!

கரு.நாகராஜன்

கரு.நாகராஜன்

திருமாவளவன் கூறுவது போல் இந்த தேர்வினால் தொற்று பரவாது என்றும் மால்கள், மார்க்கெட்கள் என அனைத்தும் இயங்க அனுமதி அளித்துள்ள நிலையில் தேர்வு நடத்துவதில் தவறு இல்லை  என்றும் கரு.நாகராஜன் தெரிவித்தார்.

  • Share this:
நீட் தேர்வு குறித்து  ஆராயும் குழுவை தடை செய்ய மேல்முறையீடு செய்யும் திட்டம் இல்லை என பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் தமிழக அரசு அமைத்த குழுவை எதிர்த்து பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கை இன்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் இதுகுறித்து திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கரு.நாகராஜன்,  நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்று தருவோம் என கூறிவிட்டு தற்போது நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழக அரசினால் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக இருக்கிறது என்பதால்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.  இந்த குழு நீட்டுக்கு எதிரான எந்தவித ஆராய்ச்சியிலும் ஈடுபடவில்லை, இந்தக் குழு எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நீட் தேர்வு நடைபெறும் என்றும் உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. இதன் மூலம் திமுகவின் நாடகம் முறியடிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழக அரசின் நீட் ஆய்வுக்குழு செல்லும்: பாஜக மனு தள்ளுபடி!


திருமாவளவன் கூறுவது போல் இந்த தேர்வினால் தொற்று பரவாது என்றும் மால்கள், மார்க்கெட்கள் என அனைத்தும் இயங்க அனுமதி அளித்துள்ள நிலையில் தேர்வு நடத்துவதில் தவறு இல்லை  என்றும் தெரிவித்த அவர்,  மாணவர்கள் குழப்பம் அடையக்கூடாது எனபதே தங்களது முழு நோக்கம் என கூறினார்.

நீட் தேர்வு குறித்த இந்த குழு முழுக்க முழுக்க அரசியல் நாடகம் என்றும் இந்தக் குழுவால் நீட் தேர்வுக்கு பாதிப்பில்லை என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வாய்ப்பு இல்லை என்றும் கரு.நாகராஜன் தெரிவித்தார்.

மேலும் படிக்க: நீட் ஆய்வு குழுவுக்கு எதிராக பாஜக உச்ச நீதிமன்றத்தை நாடினால் திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்வோம்: வில்சன்!


தொடர்ந்து பேசிய அவர், ‘ கடந்த 25 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ சீட்டு கிடைக்காமல் தவித்ததாகவும் இதை சரி செய்யும் விதமாக கடந்த அதிமுக ஆட்சியில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த காலங்களில் தமிழக அரசு நுழைவுத் தேர்வுகளுக்கு எதிராக அமைக்கப்பட்ட குழுவானது மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகளை கட்டுபடுத்துமே தவிர  மத்திய அரசு நடத்தக்கூடிய தேர்வு முறைகளை கட்டுப்படுத்தாது என்றும் அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: