மதுரையில்
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் தொடங்கியது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பிரபல
துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
புனித வெள்ளியை முன்னிட்டு சென்னை புனித தோமையார் மலையில் உள்ள புனித பத்ரீசியார் தேவாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கல்வாரி சதுக்கத்தை தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயாஸ் வழிபாட்டிற்கு திறந்து வைத்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவம் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி
ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர்களும் புறக்கணித்தனர்.
விருதுநகர் இளம்பெண்
பாலியல் வன்கொடுமை வழக்கில், கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை.
காரைக்குடி அருகே நடைபெற்ற பாரம்பரிய
மீன்பிடி திருவிழாவில், ஏராளமானோர் திரளாக கண்மாயிக்குள் களமாடி, மீன்களை அள்ளிச் சென்றனர்.
கோவையில்
பேருந்து தினம் கொண்டாடப்பட்டதாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சிதம்பரம் அருகே சாலையில் சுற்றித்திரிந்த முதலையை வனத்துறையினர் பிடித்து பாதுகாப்பாக ஏரியில் விட்டனர்.
பாலிவுட் நட்சத்திரங்களான
ரன்பீர் கபூர் - அலியா பட் திருமணம் மும்பையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நள்ளிரவு முதல் கடலில்
மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது.
மீன்பிடி தடைக்காலத்தின் போது தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரணத் தொகையை 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தித் தர வேண்டும் என்று ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறுவடை திருவிழாவையொட்டி, அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் சீக்கியர்கள் வழிபாடு நடத்தினர்.
அசாமியர்களின் புத்தாண்டையொட்டி முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியை ஏராளாமானோர் கண்டுகளித்தனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களி 3 நாட்களுக்கு
கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Must Read : மதுரையின் அரசியும் அவளது நாயகனும் வீதியுலா!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது குஜராத்.
இலங்கை அரசுக்கு எதிராக கொழும்புவில் பல்லாயிரக் கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.