முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பிகார்- தமிழ்நாடு இடையே நல்லுறவை கெடுக்க முயற்சி - சிராக் பாஸ்வான் பரபரப்பு குற்றச்சாட்டு

பிகார்- தமிழ்நாடு இடையே நல்லுறவை கெடுக்க முயற்சி - சிராக் பாஸ்வான் பரபரப்பு குற்றச்சாட்டு

சிராக் பாஸ்வான்

சிராக் பாஸ்வான்

பிகார்- தமிழ்நாடு இடையே நிலவும் நல்லுறவை கெடுக்க சிலர் முயற்சிப்பதாகவும் பாஸ்வான் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்திகளை பரப்பும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டிய கடமை, தமிழ்நாடு அரசுக்கு உள்ளதாக லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவியது. இந்த நிலையில், பிகார் மாநிலத் தொழிலாளர்கள் நிலை குறித்து கேட்டறிய லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் சென்னை வந்தார். பிகார் மாநிலத் தொழிலாளர்களை சந்தித்த அவர், அவர்களின் நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிராக் பாஸ்வான், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் தவறான தகவல்கள் பரப்பி இருந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

பிகார்- தமிழ்நாடு இடையே நிலவும் நல்லுறவை கெடுக்க சிலர் முயற்சிப்பதாகவும் பாஸ்வான் தெரிவித்தார். பிகார் மாநிலத்தில் போதுமான வளர்ச்சி பணிகளை நிதிஷ்குமார் அரசு ஏற்படுத்தாததால், அங்குள்ள மக்கள் இங்கு பணிக்கு வர வேண்டிய சூழல் இருப்பதாக குற்றஞ்சாட்டிய பாஸ்வான், ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு வருவதற்கு முன்பாகவே எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்று பிகார் அரசு தெரிவித்தாகவும் கூறினார்.

First published:

Tags: Bihar, Chirag Paswan, Fake News, Migrant Workers