சின்னதம்பி யானையைப் பிடிக்க களமிறங்கும் வனத்துறை அதிகாரிகள்!

சின்னதம்பி காட்டு யானையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசு தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பிலும் அக்கறை செலுத்தும் கடமை அரசுக்கு உள்ளது என்று கூறியது.

சின்னதம்பி யானையைப் பிடிக்க களமிறங்கும் வனத்துறை அதிகாரிகள்!
சின்னத்தம்பி
  • News18
  • Last Updated: February 14, 2019, 10:01 AM IST
  • Share this:
சின்னதம்பி யானையை முகாமுக்கு கொண்டு செல்ல சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், யானையை பிடிக்கும் பணிகள் இன்று தொடங்க வாய்ப்புள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 25-ம் தேதி கோவை தடாகம் பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை, டாப் சிலிப் வரகளியானு வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால், அங்கிருந்து 100 கிலோ மீட்டர்களை கடந்து பயணித்த சின்னதம்பி, தற்போது உடுமுலையை அடுத்த கண்ணாடிபுதூர் பகுதியில் தஞ்சமடைந்துள்ளது. சின்னதம்பியை கும்கியாக மாற்ற அரசு எடுத்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இந்நிலையில் சின்னதம்பியை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து விலங்கு நல ஆர்வலர்கள் அருண் பிரசன்னா, முரளிதரன் ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியன் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சின்னதம்பி காட்டு யானையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களின் பாதுகாப்பிலும் அக்கறை செலுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.


முகாமில் சின்னதம்பி யானை சிறப்பாக பராமரிக்கப்படும் என்றும், ஓரிரு மாதங்களில் மற்ற யானைகளுடன் பழக சின்னதம்பிக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சின்னதம்பியை பிடித்து வனத்துறையினர் கட்டுப்பாட்டில் வைக்க உத்தரவிட்ட நீதிபதிகள் முகாமுக்கு கொண்டு செல்ல அனுமதி அளித்தனர். நிரந்தரமாக முகாமில் வைப்பதா அல்லது காட்டுக்குள் அனுப்புவதா என்பது குறித்து பின்னர் உத்தரவிடப்படும் என தெரிவித்தனர். அதேசமயம் சின்னதம்பி யானையை பிடிக்கும்போது அதனை துன்புறுத்தவோ, காயம் ஏற்படுத்தவோ கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சின்னதம்பியை முகாமுக்கு கொண்டு செல்வதற்காக பணிகளை வனத்துறையினர் இன்று தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.Also see... நாளிதழ்களில் இன்றைய சுவாரசியமான செய்திகள்! 
First published: February 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்