ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சின்னமனூர் : சபரிமலை சீசன் - தற்காலிகமாக திறக்கப்பட்ட பைபாஸ் சாலை

சின்னமனூர் : சபரிமலை சீசன் - தற்காலிகமாக திறக்கப்பட்ட பைபாஸ் சாலை

சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால், சபரி மலைக்கு செல்லும் வாகனங்கள் செல்லும் விதமாக சின்னமனூர் பைபாஸ் சாலை தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.

  • 1 minute read
  • Last Updated :

தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால், சபரி மலைக்கு செல்லும் வாகனங்கள் செல்லும் விதமாக சின்னமனூர் பைபாஸ் சாலை தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது .

பைபாஸ் சாலை :-

தேனி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் பைபாஸ் சாலையின் பணிகள் முழுமையாக நிறைவடையும் முன்பே, அரைகுறையாக முடிந்த பைபாஸ் சாலையில், இருசக்கர வாகன ஓட்டிகளும், நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் பயன்படுத்த தொடங்கினர். இதனால் தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூர் பாளையம், தேனி போன்ற பகுதிகளில் பைபாஸ் சாலை மணல் மேடுகள் கொண்டு மூடப்பட்டு இருந்தது.

இதில் சின்னமனூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பைபாஸ் சாலையில் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் உள்ளது. ஆனால் இந்த பைபாஸ் சாலையில் மேலே செல்லும் அதி மின் அழுத்த வயர்கள் தாழ்வாக செல்வதால் , காவல்துறை சார்பில் இந்தப் பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால், பிற மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் சபரிமலைக்கு செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் தேனி மாவட்டம் வழியாகவே சபரிமலைக்கு செல்வர். இதனால் சபரிமலை சீசன் பொழுது தேனி மாவட்டத்தில் அதிக அளவிலான வாகனங்கள் செல்லும்.

அதிக அளவில் வாகனங்கள் செல்வதால் நகரப் பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்ற காரணத்தினால், சின்னமனூர் பைபாஸ் சாலையில் 2 மீட்டர் உயரமுள்ள வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பைபாஸ் சாலையில் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டும் கனரக வாகனங்கள் இந்த பைபாஸ் சாலையை பயன்படுத்தாமல் இருப்பதற்காக, காவல்துறை சார்பில் இரும்பு கம்பிகள் இரண்டு மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு பைபாஸ் சாலையில் அடைக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்: சுதர்ஸன்

First published: