• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற போறீங்களா? அமைச்சர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற போறீங்களா? அமைச்சர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

சின்னத்தம்பி

சின்னத்தம்பி

சின்னத்தம்பிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் #savechinnathambi என்ற ஹேஷ்டாக் வைரலாகிவருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சின்னத் தம்பி யானை கும்கியாக மாற்றப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை சின்னத்தடாகம், பெரிய தடாகம் உள்ளிட்டப் பகுதிகளில் ஊருக்குள் புகுந்து வயல் நிலங்களை சேதப்படுத்துவதாக கூறி சின்னத்தம்பி என்ற யானையை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வனத்துறையினர் பிடித்து டாப்சிலிப் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

சின்னத் தம்பிக்கு ஆதரவாக ஊர் மக்கள் ஒட்டிய போஸ்டர்


டாப்சிலிப் பகுதியில் விடப்பட்ட சின்னத்தம்பி யானை இரு தினங்களுக்கு மீண்டும் ஊருக்குள் புகுந்தது. இருப்பினும், எந்தத் தொந்தரவும் செய்யாமல் சுற்றிவருகிறது. சின்னத் தம்பியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், கோவையில் மேற்கு தொடர்ச்சிமலை பாதுகாப்பு குறித்து சூழலியல் மாநாடு நேற்று தொடங்கியது.

இரண்டாவது நாளான இன்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘டாப்சிலிப்பில் விடப்பட்ட சின்னத்தம்பி யானை மீண்டும் ஊருக்குள் புகுந்துள்ளது. இந்த யானையை கூண்டுக்குள் அடைத்து கும்கியாக மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. கும்கியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார். சின்னத் தம்பி யானையை கும்கியாக மாற்றக் கூடாது என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் குரல் எழுப்புகின்றனர். சின்னத்தம்பிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் #savechinnathambi என்ற ஹேஷ்டாக் வைரலாகிவருகிறது.

Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: