பெங்களூரை தலைமையிடமாககொண்டு 20-க்கும் மேற்பட்ட லோன்ஆப்களை நடத்திவந்த சீனர்: சைபர் அட்டாக் நடத்த திட்டம்? - 4 பேர் கைது

பெங்களூரை தலைமையிடமாககொண்டு 20-க்கும் மேற்பட்ட லோன்ஆப்களை நடத்திவந்த சீனர்: சைபர் அட்டாக் நடத்த திட்டம்? - 4 பேர் கைது

கைது செய்யப்பட்ட சீனர்கள்

கர்நாடகா மாநிலம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு 20 க்கும் மேற்பட்ட லோன் ஆப்களை நடத்தி வந்த இரண்டு சீனர்கள் உட்பட 4 பேரை தமிழக காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

  • Share this:
சென்னை வேங்கை வாசல் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் பணத்தேவை காரணமாக எம் ருபி(MRupee) என்ற லோன் ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதில் ரூபாய்  1,500 வட்டியாக பிடித்துக்கொண்டு 3,500 ரூபாய் மட்டும் அவரது வங்கி கணக்கில் செலுத்தி உள்ளனர்.

சில தவணைகள் கட்டிவிட்டு, மீதமுள்ள பணத்தை கட்டமுடியாமல் தவித்து வந்துள்ளார். பின்னர் இந்தக் கடனை அடைப்பதற்காக மற்றொரு லோன் ஆப்பில் கடன் வாங்குவது, அதனை அடைப்பதற்காக மற்றொரு லோன் ஆப்பில் கடன் வாங்குவது என கணேசன் 40 லோன் ஆப்பில் கடன் வாங்கி பணம் கட்ட முடியாத கட்ட முடியாமல் திண்டாடி உள்ளார். இதனால் லோன் ஆப் கால் சென்டரில் இருந்து தொடர்ச்சியாக இவருக்கு ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் மிரட்டல் வந்த மொபைல் நம்பர்களை ட்ரேஸ் செய்த போது அவற்றில் பெரும்பாலான மொபைல் எண்கள் பெங்களூரில் உள்ள True Kindle Technology Pvt.Ltd என்ற ஒரே கால் சென்டரில் இருந்து வந்திருப்பது தெரிய வந்தது.

அங்கு சென்ற போலீசார் 110 நபர்களை ஊழியர்களாக கொண்டு கால் சென்டரை நடத்தி வந்த பெங்களூரைச் சேர்ந்த பிரமோதா மற்றும் பவான் ஆகிய இருவரை கடந்த 31ஆம் தேதி கைது செய்து அவர்களிடம் இருந்து 20 லேப்டாப்கள் மற்றும் 20 செல்போன்களை பறிமுதல் செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் பிரமோதா மற்றும் பவான் ஆகிய இருவரின் மேற்பார்வையில் True kindle technology pvt.ltd நிறுவனம் நடந்து வந்தது தெரியவந்தது. இதே நிறுவனம் M-Rupee போல My cash, aurora loan, quick loan, Rapid loan, D-Money, Easy cash, new rupee, rupee loan என்ற லோன் ஆப்களையும் நடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும், சீனா, க்வாண்டாங் பகுதியை சேர்ந்த சியா யமோவ் மற்றும் யூ யுவ்ன்லூன் ஆகிய இருவரும் சீனாவிலிருந்து பெங்களூரில் தங்கி இந்த லோன் ஆப்களுக்கு முதலீடு செய்து அதனை நடத்தி வருவதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் பாஸ்போர்ட் காலக்கெடு முடிந்தும் இந்தியாவில் பல மாதங்களாக தங்கி இருந்து லோன் ஆப்கள் நிறுவனம் நடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சீனாவை சேர்ந்த ஹாங்க்(hong) என்பவர் இந்தியாவில் இதுபோன்று பல லோன் ஆப் பெயர்களில் ஆன்லைன் லோன் ஆப்கள் நடத்திவருகிறார் என்பது தெரியவந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள சீனாவை சேர்ந்த 2 நபர்களுமே ஹாங்கின் ஒரு நிறுவன மேலாளர்கள் என்பது தெரியவந்தது. லோன் ஆப் கால் சென்டரில் பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு குறைந்தது 10 வாடிக்கையாளர்களை சேர்க்கவேண்டும் எனவும், அதேபோல வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த தாமதம் ஆகினால், வாடிக்கையாளர்களுடைய மொபைல்களை ஹேக் செய்து தகவல்களை திருடுவதற்கும், அதன் மூலம் வாடிக்கையாளர்களை மிரட்டுவதற்கும் தனித்தனியாக ஊழியர்களை நியமித்துப்பதும் தெரியவந்ததுள்ளது.

வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரும் பணங்களை பல்வேறு வங்கி கணக்கிலிருந்து அவர்கள் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி அங்கிருந்து சீனாவுக்கு அனுப்பப்படுவதும் தெரியவந்தது.

குறிப்பாக வாடிக்கையாளர்களிடம் பெரும் பணம், லோன் ஆப்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே இருக்கும் racer pay என்றே செயலி மூலம் பணம் ட்ரான்சக்‌ஷன் செய்யப்பட்டு பின்பு அவை நிறுவனத்தின் வங்கிக் கணக்குக்கு அனுப்பப் படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த racer pay  செயலிகள் போல வேறு ஏதேனும் செயலிகள் பயன்படுத்தி பணத்தை வங்கிகளுக்கு பணப் பரிமாற்றம் செய்துள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படி வாடிக்கையாளர்களுக்கும் லோன் ஆப்களுக்கும் இடையேயுள்ள racer pay செயலிகள் மூலமாக True kindle technology pvt ltd நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளான ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் ஆர்.பி.எல் ஆகிய வங்கிக் கணக்குகள் மூலமாக பணத்தை லோன் ஆப் நிறுவனம் பெற்றுக்கொள்வதும் தெரிய வந்துள்ளது.

கிடைக்கப்பெற்ற இரண்டு வங்கி கணக்குகளையும் சோதனை செய்து பார்த்தபோது கோடிக்கணக்கான ரூபாய் பணம் சிங்கப்பூர் மற்றும் மலேசியா வரை சென்று இருப்பதும் அதே போல சிங்கப்பூர், மலேசியா மற்றும் பல நாடுகளிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் பெங்களூரில் உள்ள இந்த நிறுவனத்துக்கு வந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இந்த வங்கி கணக்கிலிருந்த ரூபாய் 2.50 கோடி பணத்தை சைபர் கிரைம் போலீசார் முடக்கம் செய்துள்ளனர்.

True kindle technology pvt ltd என்ற நிறுவனத்தின் மூலம் செயல்படும் லோன் ஆப்புகள் மூலம் இந்தியாவில், இதுவரை 25 ஆயிரம் பேருக்கு கடன் வழங்கி உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அதன் மூலம் பல கோடி ரூபாய் பணம் வட்டியாக மோசடி செய்துள்ளார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் லோன் ஆப்களை வடமாநிலத்தை சேர்ந்த நூத்தன் ராம் என்பவர் வடிவமைத்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஹாங்க் பெங்களூரில் மட்டும் தான் true kindle technology pvt ltd நிறுவனம் நடத்தி லோன் ஆப்களை செயல்படுத்தி வந்தாரா? அல்லது இந்தியாவில் எங்கெல்லாம் இவர் லோன் ஆப் நிறுவனம் நடத்தி வருகிறார் என்பது குறித்தும், சீனாவிலிருந்து வேறு என்னென்ன ஆப்கள் தடையை மீறி இந்தியாவில் செயல்படுத்தி வருகின்றனர் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே போல இந்தியாவில் செயல்படும் இந்த லோன் ஆப்களுக்காக சர்வதேச அளவில் பணம் புழக்கதில் உள்ளதால் இதுபற்றி அமலாக்கதுறை விசாரணை நடத்தப்படவிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெறும் பண மோசடி மட்டுமல்லாமல், சீன செயலிகளை இந்தியா தடை விதித்த பிறகு இந்தியா மீது சீனா சைபர் அட்டாக் நடத்துவதற்காக இதுபோன்று பெருமளவில் செயலிகளை இந்தியாவில் உலவவிட்டு அதன் மூலம் இந்தியர்களின் மொபைல் தகவல்களை திருடி வருவதால் இது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்ற அதிர்ச்சிகரமான தகவல்களை போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல,  இந்திய பெரும் பணக்காரர்கள் தங்களது கருப்பு பணத்தை நல்ல பணமாக மாற்றுவதற்கு சீனாவில் இடைத்தரகர்களை கொண்டு இது போன்ற செயலிகளை இந்தியாவில் புழக்கத்தில் விட்டுவருகின்றனர்களா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: